18 வயது நிரம்பியவர்கள் மட்டுமில்லாமல், அதற்குக் குறைவான வயதுடைய சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பான் கார்டு பெற்ற முடியும்.
இந்தியாவில் வயது வந்தவர்கள் அனைவரும் பல்வேறு தேவைகளுக்காக அரசு வழங்கும் அடையாளச் சான்றுகளை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் பான் கார்டையும் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் முக்கிய ஆவணமாக உள்ளது. இன்னும் பல இடங்களிலும் பான் கார்ட் அவசியம் தேவை. வங்கிகளில் KYC ஆவணமாகவும் பான் கார்டு உள்ளது. ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதும் கட்டாயம். அதிக அளவிலான பணப் பரிவர்த்தனை நடைபெறும்போதும் பான் கார்டு கட்டாயமாகத் தேவை.
பான் கார்டு எப்போது வாங்க வேண்டும்?
18 வயது நிரம்பியவர்கள் மட்டுமில்லாமல், அதற்குக் குறைவான வயதுடைய சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பான் கார்டு பெற்ற முடியும். சிறாருக்கு வழங்கப்படும் பான் கார்டில் அவர்களின் புகைப்படம் அல்லது கையொப்பம் இருக்காது. எனவே, அதைச் அடையாளச் சான்றாக பயன்படுத்த முடியாது.
குழந்தைகளின் பான் கார்டு அவர்களின் பெற்றோர்கள் பெயரில்தான் இணைக்கப்படும். குழந்தைகளுக்கு 18 வயது ஆனதும் பான் கார்டை அப்டேட் செய்ய வேண்டியது அவசியம். அப்போது தனியாக பான் கார்டு பெறலாம். அதில் புகைப்படம், கையொப்பம் இருக்கும்.
கேப்சூல் கார் தெரியுமா? டயர், ஸ்டியரிங் இல்லாமல் இயங்கும் எதிர்கால எலெட்ரிக் கார் இதுதான்!
குழந்தைகளுக்கு பான் கார்டு தேவையா?
குழந்தைகள் பெயரில் முதலீட்டு திட்டங்களில் சேரும்போது பான் கார்ட் தேவைப்படும். பெற்றோரின் முதலீடுகளுக்கு குழந்தையை நாமினியாக நியமிக்க விரும்பினால், அப்போதும் பான் கார்ட் முக்கிய ஆவணமாக பயன்படும்.
குழந்தைகளுக்கு தனியாக வருமானம் இருந்தால், பான் கார்ட் தேவைப்படலாம். இப்போது குழந்தைகளுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்கு தொடங்கி கொடுக்கிறார்கள். அப்போது பான் கார்டு இருந்தால் அதையும் இணைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு பான் கார்ட் வாங்குவது எப்படி?
NSDL இணையதளத்திற்கு சென்று 49A படிவத்தை பூர்த்தி செய்து தேவையான விவரங்களை கவனமாக நிரப்ப வேண்டும். முழுமைநாக நிரப்பிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள், பெற்றோரின் புகைப்படம் போன்றவற்றையும் இணைக்க வேண்டும். சிறிய தொகையை விண்ணப்ப கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பான் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். விண்ணபித்த 10-15 நாட்களுக்குள் பான் கார்டு கிடைத்துவிடும்.
பான் கார்டு பெறத் தேவையான ஆவணங்கள் என்னென்ன?
குழந்தைகள் பெயரில் பான் கார்ட் பெற பெற்றோரின் முகவரி சான்று, அடையாளச் சான்று, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம்.
டப்பா காரை கொடுத்து ஏமாற்றிய BMW! ரூ.50 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம்!