Yamaha Aerox 155 : இந்தியாவில் sold out-ஆன யமஹா பிரீமியம் ஸ்கூட்டர்

By Kevin KaarkiFirst Published Feb 16, 2022, 11:26 AM IST
Highlights

யமஹா நிறுவனத்தின் ஏரோக்ஸ் 155 மோட்டோ GP எடிஷன் இந்தியாவில் விற்றுத்தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்தது. 

யமஹா நிறுவனத்தின் ஏரோக்ஸ் 155 மோட்டோ GP எடிஷன் இந்தியாவில் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. லிமிடெட் எடிஷன் மாடல் என்பதால், குறிப்பிட்ட இந்த நிற வேரியண்டை யமஹா மீண்டும் விற்பனைக்கு கொண்டுவராது. 

மோட்டோ GP எடிஷன் ஏரோக்ஸ் 155 மாடலில் மோட்டோ GP ரேஸ் மெஷின்களில் மட்டும் வழங்கப்பட்டு இருக்கும் மஹாவின் மான்ஸ்டர் எனர்ஜி கிராஃபிக்ஸ் இடம்பெற்று இருந்தது. மற்றப்படி மெக்கானிக்கல் அம்சங்கள் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. 

Latest Videos

தற்போது யமஹா ஏரோக்ஸ் 155 மாடல் மெட்டாலிக் பிளாக், ரேசிங் புளூ மற்றும் கிரே வெர்மிலன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1.32 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஏரோக்ஸ் 155 நல்ல வரவேற்பை பெற்றது. பிட் ஸ்கூட்டர் போன்ற தோற்றத்தில், ஆர்15 மாடலில் உள்ள என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.79 பி.ஹெச்.பி. திறன், 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டரில் 14 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன.

இவைதவிர ஏரோக்ஸ் 155 மாடலில் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர், ABS, சைடு ஸ்டாண்டு கட்-ஆஃப் மற்றும் ப்ளூடூத் வசதி கொண்ட LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

click me!