LICIPO:மறந்துடாதிங்க 28ம் தேதி கடைசி!: எல்ஐசி பங்கு வாங்க, பான் இணைப்பு கட்டாயம்: எப்படி இணைப்பது ?

Published : Feb 16, 2022, 10:59 AM IST
LICIPO:மறந்துடாதிங்க 28ம் தேதி கடைசி!: எல்ஐசி பங்கு வாங்க, பான் இணைப்பு கட்டாயம்: எப்படி இணைப்பது ?

சுருக்கம்

எல்ஐசி பாலிசி வைத்திருக்கும் பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க விரும்பினால், வரும் 28ம் தேதிக்குள் எல்ஐசி பாலிசியுடன், பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி பாலிசி வைத்திருக்கும் பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க விரும்பினால், வரும் 28ம் தேதிக்குள் எல்ஐசி பாலிசியுடன், பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை 100 சதவீதம் ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் நேற்று தாக்கல் செய்துவிட்டது. வரும் மார்ச் மாதம் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த 5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை திரட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படஉள்ளன. இதில் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது. அதாவது எல்ஐசியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரையிலும், பாலிசிதாரர்களுக்கு 5 % வரையிலும் தள்ளுபடி தரப்படலாம் எனத் தெரிகிறது

இந்நிலையில் எல்ஐசி தாக்கல் செய்த வரைவு அறிக்கையில், “ பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க விரும்பினால், அவர்கள்  பாலிசியுடன் பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும். அதாவது பிப்ரவரி 28ம் தேதிக்குள் பாலிசிதாரர்கள் தங்கள் பாண் எண்ணை பாலிசியுடன் இணைத்திருக்கவேண்டும். அவ்வாறு இணக்காவிட்டால், அவர் பங்குவிற்பனையில் பங்கேற்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

எல்ஐசி  பாலிசியுடன் பான் எண்ணை, இணையதளத்தில் சென்றோ அல்லது எல்ஐசி அலுவலகத்துக்குச்சென்றோ, அல்லது ஏஜென்டுகள் , பொதுச்சேவை மையம் மூலம் இணைக்கலாம். இந்தியாவில் வசித்துக்கொண்டு, ஒரு பாலிசிக்கு மேல் எடுத்திருப்பவர்களும்,  இந்த திட்டத்தின் கீழ் பங்குககளை வாங்க தகுதியுள்ளவர்கள். 

2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் லாபம் ரூ.1,437 கோடியாகும். கடந்த ஆண்டு முதல்காலாண்டைவிட ரூ.6.14 கோடி அதிகமாகும்.

பாலிசியுடன்-பான் எண்ணை இணைப்பது எப்படி?


1.    எல்ஐசி இணையதளத்துக்கு செல்ல வேண்டும்
2.    ஹோம்பேஜில் பான் ரிஜிஸ்ட்ரேஷன் என்ற பக்கத்தில் கிளிக் செய்ய வேண்டும்
3.    அதில் பாலிசி எண்ணுடன், பான் கார்டு எண்ணை குறிப்பிட வேண்டும்
4.    அதைத்தொடர்ந்து சப்மிட் செய்தவுடன் ஒரு பக்கம் திறக்கும்.
5.    பின்னர் பான் எண், மொபைல் எண், பாலிசி எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். 
6.    பதிவு செய்தபின் கேப்சா வார்த்தைகளை பதிவிட்டால் ஓ.கே. செய்தால் மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்
7.    ஓடிபி எண்ணை பதிவு செய்து சப்மிட் செய்ய வேண்டும்
8.    பான் எண்ணும், பாலிசி எண்ணும் இணைக்கப்பட்டதாக திரையில் மெசேஜ்வரும்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!