world bank india : நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறையும் என உலக வங்கி தனது முன்கூட்டிய கணிப்பில் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறையும் என உலக வங்கி தனது முன்கூட்டிய கணிப்பில் தெரிவித்துள்ளது.
வளர்ச்சிக் குறைப்பு
இ்ந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தெற்காசிய மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியும், உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தால் குறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பு 2022-23 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.7சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என முன்பு உலக வங்கி கணித்திருந்தது. ஆனால், ரஷ்யா உக்ரைன் பிரச்சினை காரணமாக அதை 8 சதவீதமாகக் குறைத்துள்ளது.
பெருந்தொற்று
இந்தியாவில் பெருந்தொற்று மற்றும் பணவீக்க அழுத்தத்தில் இருந்து தொழிலாளர் சந்தை முழுமையாக மீளவில்லை என்பதால், வீடுகளிலும், குடும்பங்களிலும் நுகர்வு குறைவாக இருக்கிறது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உணவுப் பொருட்கள் விலை உயர்வால் மக்களின் உண்மையான வருமானத்தில் வலிமையான எதிர்மறைப் போக்கு நிலவுகிறது எனத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் வளர்ச்சி
ஆனால் பாகிஸ்தானின் பொருளாதார வளரச்சி நடப்பு நிதியாண்டில் அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பாகிஸ்தானிந் நடப்பு நிதியாண்டு வரும் ஜூனில் முடிகிறது, முன்னதாக பாகிஸ்தான் ஜிடிபி 3.4 சதவீதம் வளரும் எனக் கணி்த்த நிலையில் இது 4.3% வரை வளர்ச்சி அடையும் எனக் கணித்துள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு வளர்ச்சி 4% அளவில் இருக்கும்.
இலங்கை நிலை
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில்2.1 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக வளர்ச்சி அடையும். ஆனால், நிதிச்சூழல், வெளிக்கடன் ஆகியவற்றால் இதை உறுதியாக எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2021-22 நிதியாம்டில் 8.3 % வளர்ச்சி அடையும், நடப்பு நிதியாண்டில் இது 8 சதவீதமாகக் குறையும், 2023-24 நிதியாண்டில் 7.1 சதவீதமாகக் குறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும் என்பது குறித்து தெற்காசிய மண்டலத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் ஹன்ஸ் டிம்மர் கூறுகையில் “ நீ்ண்டகாலத்தில் இந்தியா கச்சா எண்ணெயை சார்ந்திருப்பதை குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களைத் தேட முயல வேண்டும், பெண்களின் பங்களிப்பு பொருளாதாரத்தில் 20 சதவீதம் மட்டுமே இருக்கிறது இதையும் உயர்த்த வேண்டும். ஒட்டுமொத்த கணிக்கிப்பின்படி, உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால், இந்தியாவின் வருவாய் வளர்ச்சி 2.3 சதவீதம் குறையும், பொருளாதார வளர்ச்சி 1.3 சதவீதம் குறையும். இதில் சிறிதளவு சர்வதேச சூழல் காரணமாக மாற்றம் வரலாம்.
பணவீக்கம்
கொரோனா பாதிப்பில் மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது. இன்னும் முழுமையான பொருளாதார மீட்சி அடையவில்லை, சேதங்கள் சரி செய்யப்படவில்லை. ஆனாலும் படிப்படியாக பொருளாதாரம் மீண்டு வருவதைக் காண முடிகிறது, பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தைப் போல் மாறுகிறது. புதிய கொரோனா உருமாற்ற வைரஸால் பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப்படவில்லை. ஆனால் உக்ரைன் போர் கூடுதலான சிரமத்தை கொடுத்துள்ளது, இதனால் பொருட்களின் விலைவாசி அதிகரிக்கிறது, பணவீக்கம் உயர்ந்து வருகிறது. இதுதான் தற்போதுள்ள சிக்கல்” என த் தெரிவித்தார்