
ஆதார் எண் :
ஆதார் இல்லையென்றால் இனி எதுவும் அசையாது என்ற உணர்வு தற்போது எழுந்துள்ளது. எதை எடுத்தாலும் ஆதார் எண் , எல்லா வற்றிலும் ஆதார் எண் என அனைத்திலும் அதார் எண்ணை இணைக்க வேண்டிய தருணத்தில் தான் நாம் உள்ளோம் .
கடந்த வாரம் கூட, ஆதார் எண்ணை , நாம் பயன்படுத்தும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு . இந்நிலையில், தற்போது ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் பொருட்கள் ரத்து :
ஒரு வேளை ஆதார் எண்ணை, ரேஷன் அட்டையுடன் இணைக்காவிட்டால் , வரும் ஜூன் 3௦ ஆம் தேதிக்கு மேல், ரேஷன் பொருட்கள் வழங்க பட மாட்டாது என மத்திய அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. ஆதலால், இதுவரை யாரெல்லாம் ஆதார் எண்ணை இணைக்க வில்லையோ உடனடியாக இணைத்து கொள்வது நல்லது.
கடைசி தேதி ...!
ஆதார் எண் இணைக்க கால அவகாசம் ஜூன் 3௦ வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.