ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது ஏன் ? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!

First Published Apr 21, 2017, 12:31 PM IST
Highlights
why aathaar must for all supreme court raised question


ஆதார் இல்லாமல் எந்த அணுவும் இயங்காது என்ற நிலை உருவாகி உள்ளது. வங்கி கணக்கு,பான் கார்டு ரேஷன் கார்ட் மொபைல்  எண்  என அனைத்திலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது அதே வேளையில், ஆதார்  எண் என்பது தனி மனிதனை  அடையாளமாகவே  பார்க்கப் படுகிறது . இந்நிலையில் ஆதார்  எண் பல  திட்டங்களுக்கு  கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆதார் எண் அனைத்திற்கும் கட்டாயமாக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.இருந்தபோதிலும் பல திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது ஏன் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

இதற்கு மத்திய அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.அதாவது பான் எண்ணை தவறாக  பயன்படுத்துவதை தடுக்க ஆதார் கட்டாயமாகப்பட்டது எனவும், ஆதார்  இருந்தால் மட்டுமே சட்ட விரோதமான பண பரிவர்த்தனையை தடுக்க முடியும் எனவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம்   கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

click me!