யார் இந்த ஸ்ரீனிவாஸ் பாலியா? விப்ரோ சி.இ.ஓ. பதவியைப் பிடித்தவரின் பின்னணி என்ன?

By SG Balan  |  First Published Apr 7, 2024, 1:10 AM IST

ரிஷாத் பிரேம்ஜியுடன் நெருக்கமாக பணியாற்றிய ஶ்ரீனிவாஸ் பாலியா வரும் மே மாதத்துக்குப் பின் விப்ரோவின் சி.இ.ஓ.வாகப் பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.


விப்ரோ தனது புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ஸ்ரீனிவாஸ் பாலியாவை நியமனம் செய்துள்ளது. இது தொடர்பாக ஐடி நிறுவனமான விப்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த தியரி டெலாபோர்ட் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் சுமூகமான மாற்றத்தை உறுதிசெய்வதற்காக மே இறுதி வரை தொடர்வார் என்றும் அதற்குப் பின் ஸ்ரீனிவாஸ் பாலியா பொறுப்பேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. ரிஷாத் பிரேம்ஜியுடன் நெருக்கமாக பணியாற்றி வந்தவர் ஶ்ரீனிவாஸ் பாலியா.

Tap to resize

Latest Videos

சிஇஓவாக நியமனம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீனி பாலியா, "விப்ரோ நிறுவனமானது லாபத்தையும் நோக்கத்தையும் இணைத்து செயல்படும் அரிய நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தை வழிநடத்த தேர்வு செய்யப்பட்டதற்கு நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவை மிரட்டிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ஆட்டம் கண்ட சுதந்திர தேவி சிலை!

 

30 ஆண்டுகளுக்கு மேலாக விப்ரோவில் பணியாற்றிய அனுபவமிக்க ஸ்ரீனி, இதற்கு முன் அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்துவரும் அமெரிக்காஸ் 1 இன் சி.இ.ஓ. பணியில் இருந்தார்.

ஏற்கெனவே விப்ரோவில் இருந்தபோது ஶ்ரீனி பாலியா பல்வேறு துறைகளுக்குத் தலைமை தாங்கியுள்ளளார் என்றும் அவற்றின் நோக்கங்களை வகுத்து, வளர்ச்சி உத்திகளைத் திறமையாக செயல்படுத்தினார் என்றும் விப்ரோ கூறுகிறது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரிக்க உதவியவர் ஸ்ரீனி என்று விப்ரோ புகழாரம் சூட்டியிருக்கிறது.

நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் இருக்கும் 1992 இல் விப்ரோவில் சேர்ந்ததிலிருந்து, விப்ரோவின் நுகர்வோர் வணிகப் பிரிவின் தலைவர், வணிக பயன்பாட்டுச் சேவைகளின் தலைவர் என பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். விரிவான நிறுவன மற்றும் தொழில்துறை அறிவு கொண்டவர் ஶ்ரீனி பாலியா.

ஸ்ரீனி, பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்தில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின், மேலாண்மைப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் மற்றும் மெக்கில் எக்ஸிகியூட்டிவ் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் நிர்வாகப் படிப்புகளை முடித்துள்ளார்.

சி.இ.ஓ. பணியை நியூ ஜெர்சியில் இருந்தே கவனிப்பார். தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜியுடன் இணைந்து செயல்பட உள்ளார்.

விப்ரோ லிமிடெட் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, நிறுவனத்தின் பயணத்தில் ஶ்ரீனிவாஸ் பாலியாவின் பங்கைக் குறிப்பிட்டு, ஸ்ரீனி பாலியாவின் தலைமை மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார். "வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அவரது அணுகுமுறை, வளர்ச்சி மனப்பான்மை, செயல்பாடுகளை வலுவாக்குதல் மற்றும் விப்ரோவுடன் அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு ஆகிய காரணங்களால் அவர் தலைமைப் பொறுப்புக்குச் சரியான தேர்வாக இருப்பார்" என்று ரிஷாத் பிரேம்ஜி கூறியிருக்கிறார்..

நூறு வயதுக்கு மேல் வாழ்வது எப்படி? உலகின் வயதான மனிதர் கூறும் நீண்ட ஆயுள் ரகசியம்!

click me!