உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரையடுத்து, ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக விதித்துள்ளன.அதில் முக்கியமானது, ஸ்விஃப்ட்(SWIFT) எனச் சொல்லப்படும், சர்வதேச பேமெண்ட் முறையை பயன்படுத்த தடைவிதிக்கும் உத்தரவாகும். சர்வதேச வங்கிமுறையை பயன்படுத்த ரஷ்ய வங்கிகளுக்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடை ரஷ்யப் பொருளாதாரத்தை மேலும் பலவீனமாக்கும்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரையடுத்து, ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக விதித்துள்ளன.
அதில் முக்கியமானது, ஸ்விஃப்ட்(SWIFT) எனச் சொல்லப்படும், சர்வதேச பேமெண்ட் முறையை பயன்படுத்த தடைவிதிக்கும் உத்தரவாகும். சர்வதேச வங்கிமுறையை பயன்படுத்த ரஷ்ய வங்கிகளுக்கு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடை ரஷ்யப் பொருளாதாரத்தை மேலும் பலவீனமாக்கும்.
ஸ்விப்ட் என்றால் என்ன, அதனால் என்ன செய்யமுடியும்
ஸ்விஃப்ட் எனச் சொல்லப்படுவது சர்வதேச அளவில் உள்ள வங்கிகள் பிறநாடுகளுடன் எளிதாக வங்கிப்பரிவர்த்தனை செய்ய உதவும் ஒரு செயல்முறையாகும். “சொசைட்டி ஃபார் வேர்ல்ட் வைட் இன்டர்பேங்கிங் ஃபைனான்சியல் டெலிகம்யூனிகேஷன்”எ ன்பதாகும்.
வங்கிகளுக்கு இடையே பணப்பரிவர்த்தனை தொடர்பாக பாதுகாப்பான முறையில் செய்திகளை பரிமாற்றம் செய்யும் முறை ஸ்விஃப்ட்ஆகும். இந்த முறையில் ஏறக்குறைய உலகளவில் 11 ஆயிரம் வங்கிகள் இணைந்துள்ளன. பெல்ஜியத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்விஃப்ட் முறை, சர்வதேச நிதிப்பரிமாற்றத்துக்குமுதுகெலும்பாகும். இந்த முறையிலிருந்து ரஷ்ய வங்கிகள் நீக்கப்பட்டதால், ரஷ்யாவிலிருந்து எந்த வங்கியும், மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி, எந்த நாட்டுக்கும் பணப்பரிவர்த்தனை செய்வது கடினமாகும்
எப்படி இயங்குகிறது
உலகளவில் 11 ஆயிரம் வங்கிகள் இணைந்துள்ளன. பெல்ஜியத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்விஃப்ட் முறை ஆண்டுக்கு 500 கோடி பரிவர்த்தனைகளைச் செய்கிறது. வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்யும்போது சர்வதேச வங்கிகள் தங்களுக்கு இடையே பேசிக்கொள்ள உதவுகிறது. இரு வங்கிகள் கூட்டறவோடு, பர்வர்த்தனை இல்லாமல் இருந்தால்கூட ஸ்விஃப்ட் முறையில் இணைந்துவிட்டால் எளிதாக பரிமாற்றம் செய்ய முடியும். மிகுந்த பாதுகாப்பான முறை என்பதால், எளிதாக ஹேக்கிங் செய்ய முடியாது. வங்கிகளுக்கு இடையிலான பரிமாற்ற விவரங்கள் மட்டுமே இதில் இருக்கும்
ஸ்விஃப்ட் உரிமையாளர் யார்
பெல்ஜியம்அரசின் சட்டப்படி உருவாக்கப்பட்டதுதான் ஸ்விஃப்ட் கூட்டுறவு நிறுவனமாகும். இந்த நிறுவனம் பங்குதாரர்களால் நிர்வகிக்கப்படுகிறது, ஏறக்குறைய 3,500 நிறுவனங்கள் இதில் உள்ளன. ஜி10 நாடுகளில் உள்ள வங்கிகளால் இந்த ஸ்விஃப்ட் முறை நிர்வகிக்கப்படுகிறது. ஐரோப்பிய மத்திய வங்கி, பெல்ஜியம் மத்தியவங்கியும் இதைக்கண்காணிக்கின்றன
ஸ்விஃப்ட்-ரஷ்யா
ஸ்விஃப்ட் அமைப்பில் பயன்பாட்டாளவில் அமெரிக்காவுக்கு அடுத்தார்போல் ரஷ்யா2-வது இடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட ரஷ்ய வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதில் உள்ளன. ரஷ்யப் பொருளாதாரத்தின், பணப்பரிவர்த்தனையின் 50% மேல் ஸ்விஃப்ட் முறையில்தான் நடக்கிறது
ஆசியா பசிபிக் அமைப்பின் தலைமைப் பொருளாதார வல்லுநர் அலிசியா கார்சியா ஹெரிரே கூறுகையில் “ ஸ்விஃப்ட் அமைப்பிலிருந்து ரஷ்யாவை நீக்கியது, அந்நாட்டுக்கும், பொருளாதாரத்துக்கும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எந்தவிதமான கடனும் வாங்க முடியாது, பணம் செலுத்தவும் முடியாது. ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய யூனியன் எரிவாயு இறக்குமதியை நிறுத்தியதைவிட பெரிதான நடவடிக்கை” எனத் தெரிவித்தார்
என்னசெய்யப்போகிறது ரஷ்யா
சர்வதேச அளவில் மற்றவங்கிகளுடன் இனி ரஷ்ய வங்கிகள் தொடர்பு கொள்வதும், பரிமாற்றம் செய்வதும் கடினமாகும். நட்புநாடான சீனாவுடன் கூட வர்த்தகம் செய்வதும், பணப்பரிமாற்றம் செய்வதும் கடினமாகும். இதனால் வர்தத்கம் மந்தமாகும், வங்கிப்பரிமாற்றம்அதிகமான செலவுடையதாக இருக்கும். ஸ்விஃப்ட் முறைக்கு மாற்றாக ரஷ்யா தனது சொந்த நெட்வொர்க்கான எஸ்பிஎப்எஸ்(சிஸ்டம் ஃபார் டிரான்ஸ்பர் ஆப் பைனான்சியல் மெசேஜ்) முறையை வலுப்படுத்த இருக்கிறது