முதல் எலெக்ட்ரிக் வாகன ரிலீஸ் - சூப்பர் அப்டேட் கொடுத்த ஹீரோ மோட்டோகார்ப்

By Kevin KaarkiFirst Published Feb 28, 2022, 12:31 PM IST
Highlights

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மூத்த நிதி அலுவலர் நிரஞ்சன் குப்தா இதனை தெரிவித்தார். அதிக எண்ணிக்கையில் பிரீமியம் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எலெக்ட்ரிக் வாகனங்களை ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிட இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் தனது முதல் எலெக்ட்ரிக் வாகன திட்டத்தில் நீண்ட காலமாமக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான டீசரை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டது. அறிமுகமாகும்  பட்சத்தில் இந்த மாடல் டி.வி.எஸ். ஐகியூப், பஜாஜ் செட்டாக் மற்றும் ஓலா எஸ்1 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

பிரமீயம், மிட் அல்லது மாஸ் என ஒவ்வொரு பிரிவிலும் படிப்படியாக வாகனங்களை அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவினர் அல்லது தேர்வு செய்யப்பட்ட பகுதிகள் மட்டுமின்றி அனைவருக்குமான எலெக்ட்ரிஃபிகேஷன் வழழங்குவது தான் ஹீரோ மோட்டோகார்ப் குறிக்கோள் என அந்நிறுவனம் கருதுகிறது. 

எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வது மட்டுமின்றி ஏத்தர் எனர்ஜி மற்றும் கோகோரோ போன்ற நிறுவனங்களிலும் தொடர்ந்து முதலீடு செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகன பிரிவை சார்ந்து இயங்கும் இதர நிறுவனங்களிலும் முதலீடு செய்யவும் ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருவாக்குவது மட்டுமின்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுக்க எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் வசதியை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும். 

click me!