“முடியப்போகும் 50 நாட்கள் “  ஜனவரி 1 புத்தாண்டா ....? புதிய திட்டத்துடன் மோடியா ..??

First Published Dec 26, 2016, 12:57 PM IST
Highlights


“முடியபோகும் 50 நாட்கள் “  ஜனவரி 1 புத்தாண்டா ....? புதிய திட்டத்துடன் மோடியா ..??

நவம்பர்  8 ஆம் தேதி  என்பது   இந்தியாவில்  உள்ள எந்த மனிதரும்  மறக்க முடியாத   நாளாக இருக்கும் என்பதில்  எந்த  மாற்றமும் இல்லை .

நப்வம்பர்  8   ஆம் தேதி,  பழைய ரூபாய்  நோட்டுகள் செல்லது என  பிரதமர் அறிவித்தார்.அதனை தொடர்ந்து பல கட்டுப்பாடுகள்  இருந்தது. கருப்பு பண  ஒழிப்பு திட்டத்திற்காக, பழைய   500, 1000  ரூபாய்  நோட்டுகள்  செல்லாது என  அறிவித்த பின்பு,  மக்கள் தங்கள் கையில்  உள்ள  கொஞ்ச நெஞ்ச பணத்தையும்  வங்கியில் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதுமட்டும் இல்லாமல்,  வாரத்திற்கு  அதிக பட்சமாக  24  ஆயிரமும்,  ஒரு நாளைக்கு 2500 ரூபாய்  வரை  மட்டுமே   ஒரு நபர் வங்கியில் இருந்து எடுக்க முடியும் என  தெரிவித்தது.

இதற்கிடையில், நரேந்திர மோடி அவர்கள்,  “  50  நாட்கள் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள் , தற்போது நிலவும் அசாதாரண  சூழல் சரியாகி விடும்,...... டிசம்பர் 31 ஆம்  தேதிக்கு  பிறகு  இந்தியா ஊழல்  இல்லாத  நாடாக  மாறிவிடும் “ என     தெரிவித்தார்.

இந்நிலையில்,  கருப்பு  பண  பதுக்கல்  காரர்கள் , தங்களால்  இயன்ற  வழிகளில் எல்லாம்  முயன்று,  மீண்டும் , புது 2,000 ரூபாயை    பதுக்கி  வைத்துள்ளனர்.

இவர்களை பிடிக்க ,  ஆங்காங்கே  வருமானவரித்துறையினர்  அதிரடி நடவடிக்கை  எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்  ஒன்றும் அறியா பாமர மக்கள் படும் அவலங்களை  மோடி, பார்த்துக் கொண்டு தான்  இருக்கிறார். இதனை தொடர்ந்து,  மக்களின்   பிரச்சனைக்கெல்லாம் ஒரு  முடிவு கட்ட , நாளை நிதி  ஆயோக் அலுவலகத்தில்  பிரதமர்,  முக்கிய  ஆலோசனை  நடத்த  உள்ளார்.

இந்த  கூட்டத்தில்  நிதி மற்றும் வர்த்தக  அமைச்சர்கள் , பொருளாதார   வல்லுநர்கள் கலந்துக்கொண்டு  தங்கள்   கருத்துகளையும்  முன்வைக்க  உள்ளனர்.

இதனை தொடர்ந்து, தற்போது, வரும்  டிசம்பர்  3௦ ஆம் தேதி , பிரதமர்  அறிவித்த  அந்த “ 50 நாட்கள்  முடிவுக்கு  வர  உள்ளதால், புத்தாண்டு தினமான   வரும் ஜனவரி 1  ஆம் தேதி, மோடியின் அறிவிப்பு  என்னவாக இருக்கும்  என   பல   எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி  உள்ளது.....

ஜனவரி 1 புத்தாண்டா இருக்குமா ?...... மோடியின் அடுத்த  அறிவிப்பு வெளியாகுமா என  இப்பவே  சிந்திக்க  வைத்துள்ளது.

 

click me!