Savings Bonds | தொல்லை இல்லாத முதலீடு வேணுமா? - சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யுங்க!

By Dinesh TG  |  First Published Jul 19, 2024, 8:09 PM IST

பாதுகாபான மற்றும் நிலையான வருமானம் தேடும் முதலீட்டாளர்கள் மத்தியில் நாடுவது சேமிப்பு பத்திரங்கள் தான்!. நிலையான அல்லது சந்தைக்கு ஏற்ப மாறும் வட்டிவிகித பத்திரங்கள் குறித்து இங்கு காண்போம்!
 


மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் இந்த மாறும் வட்டிவிகித சேமிப்பு பத்திரங்கள் அனைத்தும், அடுத்த அரையாண்டு காலத்திற்கான வட்டி விகிதம் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்திற்கு இந்த பத்திரங்களுக்கான வட்டி விகிதம் முந்தைய அரையாண்டில் இருந்த அதே 8.05% சதவீதமாக மாற்றமின்றி தொடரும் என அறிவித்துள்ளது.

இந்த ஏற்றம் இறக்கம் கொண்ட வட்டி விகிதம் காரணமாகவே இவ்வகையான சேமிப்பு பத்திரங்கள் ஈர்ப்புடையதாக அமைந்துள்ளன. முதலீட்டாளர்கள் பெரிதும் இதை நாடுகின்றனர். இவற்றில் முதலீடு செய்வதன் சாதக பாதகங்களை கவனமாக புரிந்து கொள்வது அவசியம்.

மாறும் வட்டிவிகிதம்

மத்திய அரசு சார்பில் ரிசர்வ் வங்கி பல்வேறு வகையிலான சேமிப்பு பத்திரம், தங்க பத்திரங்கள் என வெளியிடப்படுகிறது. இதில், மாறும் வட்டிவிகித சேமிப்பு பத்திரங்களுக்கான வட்டி விகிதம் முதலீடு காலத்தில் ஒரு மாதிரியும், வட்டி விகித சூழலுக்கு ஏற்ப மாறுபடும். இந்த சேமிப்பு பத்திரங்களின் வட்டி விகிதங்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

8th Pay Commission: மாநில அரசு ஊழியர்களை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
 

Tap to resize

Latest Videos



சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஏற்றது!

National Saving Certificate உடன் இணைக்கப்பட்ட இவ்வகை பத்திரங்களுக்கான வட்டி விகிதம், இச்சான்றிதழின் வட்டியை விட, 35 அடிப்படை புள்ளிகள் அதிகமாக இருக்கும். அதாவது, அரசு அளிக்கும் பாதுகாப்பு அம்சங்களோடு, அதிக பலன் அளிக்கும் வாய்ப்பு கொண்டதாக அமைகிறது. இதனால், இவ்வகை பத்திரங்கள் சில்லரை முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது.

இவ்வகை பத்திரங்கள் 7 வருட காலத்தில் முதிர்த்தியடையும். அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதரம் மாற்றப்படும். பத்திரங்கள் வாங்கிய பின்னர், நடுவே விலக்கி கொள்ள முடியாது என்றாலும், மூத்த குடிமக்களுக்கு மட்டும் சில குறிப்பிட்ட நிபந்தனையோடு கூடிய விலக்கும் அளிக்கப்படுகிறது. இந்த பத்திரங்கள் மூலம் கிடைக்கும் லாபம் வட்டி வரி விதிப்புக்கு உட்பட்டது. ஆனால், முதலீடு வரி விலக்கிற்கு உரியது.

SBI Vs Post Office Savings |5 வருட FDயில் அதிக ரிட்டர்ன் எங்கே கிடைக்கும்? 3 லட்சம் முதலீட்டில் இவ்வளவு லாபமா?

பத்திரம் வாங்குவது எப்படி?

சேமிப்பு பத்திரங்களை பரிவர்த்தனை செய்யவோ, மாற்றவோ முடியாது. இவைகளை அடமானமாக வைத்தும் பணம் பெற இயலாது. குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயில் தொடங்கி, அதன் மடங்காக முதலீடு செய்யலாம். உச்சபட்ச வரம்பு ஏதும் கிடையாது. வங்கிகள் மூலம் எளிதாக பத்திரங்கள் பெற்று முதலீடு செய்யலாம்.

பத்திரம் பணமாக்கல்

சேமிப்பு பத்திரங்கள் முதிர்வு காலத்திற்கு முன்னர், விலக்கி கொள்ள முடியாதவை என்பதால் பணமாக்கல் தன்மை மிகக் குறைவுதான்.

7 ஆண்டுகள் லாக் இன் பீரியட் ஒரு பாதகமான அம்சமாக கருதப்பட்டாலும், இது சேமிப்பின் மீதான ஒழுக்கத்தை அதகரிக்க முயற்சிக்கிறது. மூத்த வயதை எட்டும் நபர்கள் தங்கள் ஓய்வு கால திட்டமிடலுக்கு மிகவும் ஏற்றது.

சந்தை மதிப்பீடு, கமிஷன், ஏற்றம் இறக்கம் உள்ளிட்ட இடர் விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இந்த சேமிப்ப பத்திரங்கள் ஏற்றதாக அமைகின்றன. வங்கி வைப்பு நிதியுடன் ஒப்பிடும் போது இவை அதிக பலன் அளிக்கிறது.

மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வரப்பிரசாதம்! வருமான வரியை சேமிக்க முத்தான வழிகள்!

click me!