SBI Vs Post Office Savings |5 வருட FDயில் அதிக ரிட்டர்ன் எங்கே கிடைக்கும்? 3 லட்சம் முதலீட்டில் இவ்வளவு லாபமா?

By Dinesh TG  |  First Published Jul 19, 2024, 5:10 PM IST

SBI FD Vs Post Office FD இரண்டு விருப்பங்களிலும் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் எங்கு அதிக பணத்தை திரும்ப பெறுவீர்கள் என்பதையும், எந்த FD சிறந்தது என்பதையும் இங்கே காணலாம்.
 


கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எதிர்கால தேவைக்காகவும், நிகழ்கால தேவைக்காவும் சேமிக்க ஒரே முறை Fixed Deposit எனப்படும் நிலையான இருப்பு வைப்புத்தொகை மட்டுமே. இந்த ஃபிக்சட் டெப்பாசிட் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முதலீடு செய்த பணம் அப்படியே குறையாமலும், தவனை முறையில் வட்டிப் பணம் எடுக்காமல் இருந்தால் முதலீட்டு பணத்துடன் வட்டியும் சேர்ந்து அதிகப் பணம் கிடைக்கும். ஒரு புறம் பணம் முதலீடு செய்ய SBI FD-யை மக்கள் சிறந்த விருப்பத் தேர்வைக கருதுகின்றனர். மறுபுறம் சிலர் அஞ்சல் அலுவலக FD இல் முதலீடு செய்வதே சிறந்ததாக கருதுகின்றனர்.

SBI FD Vs Post Office FD இரண்டு விருப்பங்களிலும் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் எங்கு அதிக பணத்தை திரும்ப பெறுவீர்கள் என்பதையும், எந்த FD சிறந்தது என்பதையும் இங்கே காணலாம்.

SBI FD-யில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் லாபம்!

பாரத ஸ்டேட் வங்கியில் 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சத்தை முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். 5 ஆண்டுகள் கழித்து முதிர்வு காலத்தில் 6.75 சதவீத விகிதத்தில் மொத்தம் ரூ.4,14,126 கிடைக்கும்.

அதே சமயத்தில், முதலீடு செய்பவர் மூத்த குடிமக்களாக இருந்தால், 5 ஆண்டுகளுக்கு இதில் ரூ.3 லட்சத்தை டெபாசிட் செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும். தற்போது, ​​மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் வரையிலான FDக்கு 7.25 சதவீதம் வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது. முதிர்வு காலத்தில் மூத்த குடிமக்களுக்கு மொத்தம் ரூ.4,29,678 கிடைக்கும்.



Post Office FD-யில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!

அஞ்சல் அலுவலக சேமிப்பு முதலீட்டில் 7.5 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அஞ்சல் அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சத்தை முதலீடு செய்வதாகக்கொண்டால், முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.4,34,984 கிடைக்கும். மூத்த குடிமக்களும் முதிர்ச்சியின் போது அதே தொகையைப் பெறுவார்கள்.

குறிப்பிட்ட தொகையை, 5 வருடம் FD-யில் முதலீடு செய்வதாக இருந்தால் அஞ்சல் அலுவலகத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

Tap to resize

Latest Videos

8th Pay Commission: மாநில அரசு ஊழியர்களை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!


அஞ்சல் அலுவலகம் 1 வருட FDக்கு 6.00% வட்டியும், 2 வருட FDக்கு 7.00% வட்டியும் வழங்குகிறது. 3 வருட FDக்கு 7.10% வட்டியும், 5 வருட FDக்கு 7.50% வட்டியும் கிடைக்கும்.

SBI வங்கி, 1 வருடத்திற்கு மேல் ஆனால் 2 வருடங்களுக்கு குறைவான FDக்கு 6.80% வட்டி வழங்குகிறது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 3 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், 7.00% வட்டி வழங்குகிறது. 3 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 5 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், 6.75% வட்டி கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் 10 ஆண்டுகள் வரை, உங்களுக்கு 6.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

என்ன படித்துவிட்டீர்களா..? உங்களுக்கான முதலீட்டையும் விருப்பத்தேர்வையும் நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள்.

மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வரப்பிரசாதம்! வருமான வரியை சேமிக்க முத்தான வழிகள்!
 

 

click me!