அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிப்டி எனப்படும் தேசிய பங்குச் சந்தையில் தனது முதல் வர்த்தகத்தை துவக்கியுள்ளது.
அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பங்குகள் ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ. 100க்கு எதிராக ரூ. 141க்கு வர்த்தகம் செய்யத் தொடங்கியது.
அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் ஐபிஓ 255.49 மடங்கிற்கு அதிகமாக சப்ஸ்கிரைப் ஆகி இருந்தது. வெளியான பங்குகள் 11.42 லட்சம். ஆனால், 27.72 கோடி பங்குகளுக்கு சப்ஸ்கிரைப் ஆகி இருந்தது. இந்த பொது வெளியீடு ஜூன் 12 முதல் 14 வரையிலான காலத்தில் சில்லறை விற்பனை பிரிவில் 220.65 மடங்கும், மற்ற பிரிவுகளில் 281.41 மடங்கும் சப்ஸ்கிரைப் ஆகி இருந்தது.
ரூ. 11.42 கோடி மதிப்புள்ள அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் ஐபிஓ 11.42 லட்சம் பங்குகளை ஒவ்வொன்றுக்கும் 100 என்று விலை நிர்ணயம் செய்து இருந்தது.
Today Gold Rate in Chennai : குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
அர்பன் என்விரோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் கழிவு மேலாண்மை தீர்வுகள் மற்றும் நாடு முழுவதும் கழிவு சேகரிப்பு, போக்குவரத்து, கழிவுகளை பிரித்தல், அகற்றும் சேவைகளை உள்ளடக்கிய நகராட்சி திடக்கழிவு மேலாண்மை சேவைகளை வழங்குகிறது.
ஓய்வூதியத்திற்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் இவை தான்.. கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..