UPI payment fraud Here 5 safety measures for you: upi payment: ஸ்மார்ட்ஃபோனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய யுபிஐ பேமெண்ட் ஆப்களில் எவ்வாறு மோசடி நடக்காமல் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த எளிய 5 வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்ஃபோனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய யுபிஐ பேமெண்ட் ஆப்களில் எவ்வாறு மோசடி நடக்காமல் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்த எளிய 5 வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
யுபிஐ என்பது யுனைடெட் பேமெண்ட் இன்டர்பேஸ் எனப்படும். அதாவது ஒருவரின் வங்கிக்கணக்குகளை ஸ்மார்ட்போனில் இணைத்து, மொபைல் ஆப்ஸ் மூலம் எளிதாக ஒருவருக்கு பணப்பரிமாற்றம்செய்யலாம். பணம் எடுக்கவோ அல்லது அனுப்பவோ வங்கிக்குச் செல்லத் தேவையி்ல்லை. இன்று ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலானோர் யுபிஐ பேமேமெண்ட் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், தொழில்நுட்பம் வளரவளர அதற்கு இணையான மோசடிகளும் வளரத்தான் செய்கிறது. அந்தவகையில் யுபிஐ செயலிகளிலும் சிலர் மோசடி செய்து பணத்தை எடுக்கும் சம்பவங்களும் நடக்கிறது.டிஜிட்டல் உலகில் இந்த மோசடிகளில் இருந்து யுபிஐ பயன்படுத்தும் ஒருவர் தப்பிக்க5 எளிய வழிகள் தரப்பட்டுள்ளன.
யுபிஐ பின்(UPI Pin)
நம்முடைய யுபிஐ பின் நம்பரை எக்காரணம் கொண்டு வேறுஒருவருக்குத் தரக்கூடாது. குறிப்பாக அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் எனக் கூறுபவர்களிடம் தரக்கூடாது. அவ்வாறு தொலைப்பேசியில் பேசுவோர் வங்கிக் கணக்கை மேம்படுத்த வேண்டும், யுபிஐ எண்ணைப் பகிருங்கள் எனக் கூறி எளிதாக மோசடியில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறுயாரும் யுபிஐ பின் எண்ணைக் கேட்டாலும் வழங்கிடக் கூடாது.
யுபிஐ பின்மாற்றம்
யுபிஐ செயலி பயன்படுத்தும்ஒருவர் அடிக்கடி யுபிஐ பின் எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டும். மாதத்துக்கு ஒருமுறை மாற்றாவிட்டால், காலாண்டுக்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும்.
யுபிஐ பரிமாற்ற வரைமுறை
யுபிஐ செயலியில் தினசரி குறிப்பிட்ட தொகைக்கு மட்டுமே பரிமாற்றம் நடக்க இலக்கு வைத்து அதை லாக் செய்ய வேண்டும். ஒருவேளை ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டாலும், அல்லது தொலைந்துபோனாலும் யாரேனும் யுபிஐ செயலி மூலம் பணத்தை எடுக்க நினைத்தாலும் முடியாது.
மொபைல் பாதுகாப்பு:
ஸ்மார்ட்போனை எப்போதும் லாக் செய்தே வைத்திருக்க வேண்டும். எந்தச்சூழலிலும் மொபைல் போனை புதிதா ஒருவரிடம் தரக்கூடாது, அரசாங்க அதிகாரி என்று கூறுக்கொண்டு வருவோரிடமும் தரக்கூாடது. எந்தவிதமான உண்மையான அரசாங்க அதிகாரியும் மற்றொருவரின் செல்போனைக் கேட்கமாட்டார்கள்.
இணையதளத்தில் கவனம்
ஸ்மார்ட்போனில் இணையதளத்தில் ஏதேனும் தேடும்போதும், ஒருவருக்கு பணத்தை பரிமற்றம் செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும். பணம் அனுப்பிய பின் நமக்கு கிடைக்கும் ரிவார்ட்களில் கவனம் தேவை. பெரும்பாலும் அதுபோன்ற ரிவார்டுகளை தவிர்த்துவிடலாம். ஆன்-லைன் பேமெண்ட் செய்யும்போது, நம்பகத்தன்மையான தளமா என ஆய்வு செய்து அவ்வாறு இருந்தால் பரிமாற்றம் செய்யலாம்