மத்திய  பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ந்தேதி தொடக்கம் ; குடியரசுத் தலைவர் அறிவிப்பு

First Published Jan 7, 2017, 9:37 PM IST
Highlights


புதுடெல்லி, ஜன. 7-

2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ந்தேதி தொடங்குகிறது.

மாநிலங்கள் அவையைக் கூட்டுவதற்கான முறைப்படியான அறிவிப்பை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்டார்.

அதேசமயம், மக்கள் அவையை கூட்டுவதற்கு மக்களவைச் செயலாளர் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.

வழக்கமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளையும் கூட்டி குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். அன்றைய தினமே, நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இந்த ஆண்டு ரெயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படாமல், பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்படுகிறது. ஆதலால், பட்ஜெட் பிப்ரவரி முதல்தேதி தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

ஆனால், 5 மாநிலத் தேர்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 4-ந்தேதி தொடங்கி, மார்ச் 8-ந் தேதி வரை நடக்கிறது. தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துவிட்டதால், பட்ஜெட் தாக்கல் தேதியை மார்ச் 11-ந்தேதிக்கு பின் வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளன.

இது தொடர்பாக அமைச்சரவைச் செயலாளர் பி.கே.சின்ஹா பதில் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையமும் கடிதம் எழுதியுள்ளது. இந்த சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

click me!