விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லை... விவசாயிகளை ஏமாற்றியதா மத்திய பட்ஜெட்?

By SG Balan  |  First Published Feb 1, 2024, 1:15 PM IST

சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இடைக்கால பட்ஜெட் உரையில் மத்திய அரசு செயல்படுத்திய விவசாயத் திட்டங்களின் பலன்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இடைக்கால பட்ஜெட் உரையில் மத்திய அரசு செயல்படுத்திய விவசாயத் திட்டங்களின் பலன்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Latest Videos

undefined

பிரதமர் கிசான் சம்பதா யோஜனா மூலம் 38 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றார். மேலும் 2.4 லட்சம் சுயஉதவி குழுக்களுக்கும் இதன் மூலம் பலனடைந்துள்ளன என்றார். விவசாயிகளிடமிருந்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விவசாயப் பொருட்களை மாற்றுவதை எளிதாக்குவதற்கு இந்தத் திட்டம் கைகொடுத்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு உயர்த்தப்படும்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்

சேமிப்பு, பதப்படுத்துதல் உள்ளிட்ட அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் தனியார் மற்றும் பொது முதலீட்டை ஊக்குவித்து வருவதாகவும் அவர் கூறினார். பயிர்களுக்கு டிஏபி (நானோ டைஅமோனியம் பாஸ்பேட்) உரங்களின் பயன்பாடு அனைத்து விவசாய காலநிலை மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

அதிக மகசூல் தரும் எண்ணெய் வித்துக்களை உருவாக்குவதற்கான உத்தி விரைவில் வகுக்கப்படும் என்றும் கொள்முதல், மதிப்பு கூட்டல் மற்றும் பயிர் காப்பீடடு குறித்தும் ஆராயப்படும் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பால் பண்ணையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய் நோய்களைக் கையாள்வதற்கும் ஒரு விரிவான திட்டத்தையும் நிதி அமைச்சர் அறிவித்தார். மீன்வளத்துறையை தனி துறையாக்கி கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய அமைச்சர், பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா 2013-14 நிதி ஆண்டில் இருந்த கடல் உணவு ஏற்றுமதியை இரட்டிப்பாக்க உதவியுள்ளது என்றும் தெரிவித்தார்.

55 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்தவும் இத்திட்டம் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரான் உறுதி அளித்துள்ளார்.

விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம்: பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்

click me!