Union Budget 2023-24 Live Updates : மத்திய பட்ஜெட் (2023-24) தாக்கல் செய்யப்பட்டது.!
Feb 1, 2023, 4:13 PM IST
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2வது முறையாகப் பதவி ஏற்று 4-வது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரும் என்பதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். ஆகையால், இந்த பட்ஜெட்டில் மாத ஊதியம் பெறுவோர், சிறு,குறு, நடுத்தரத்தொழில்களுக்கு சலுகைகள், வருமானவரி உச்ச வரம்பு விலக்கு உயர்வு போன்றவற்றில் பல மாற்றங்கள் வரலாம் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அனைத்து தரப்பினராலும் இந்த பட்ஜெட் பெரிய எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.
4:13 PM
தங்கம், வெள்ளி மற்றும் வைரம் விலை உயருமா
தங்கம், வெள்ளி மற்றும் வைரங்கள் போன்றவற்றின் விலை உயர்த்தப்படும் என்பதையும் பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதுதவிர சிகரெட்டுகளின் விலை அதிகரிக்கப்படும் என்றார்.
3:28 PM
முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அளவு
3:23 PM
துறைவாரியாக நிதி ஒதுக்கீடு
3:20 PM
யூனிட்டி மால்...!
நாடு முழுவதும் 50 முக்கிய சுற்றுலாத் தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மாவட்டம் தோறும் மாவட்ட தலைநகரத்திலும் மக்கள் அதிகம் வருகை தரும் சுற்றுலா மையங்களிலும் ‘யூனிட்டி மால்’கள் அமைக்கப்படும். இங்கு ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யப்படும்.
3:19 PM
மொபைல், டிவி விலை குறைகிறது
செல்போன், கேமரா லென்ஸ், டிவி, லித்தியம் பேட்டரி போன்றவற்றுக்கான சுங்க வரி விலக்கு மேலும் ஒரு வருடத்திற்கு தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
3:18 PM
ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்.!
கருணாநிதிக்கு பேனா வைக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தில் வைக்கலாம் அல்லது வேறு ஒரு இடத்தில் வைக்கலாம் சுற்றுச்சூழலை பாதித்து கடலில் வைக்கக்கூடாது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
2:58 PM
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன சலுகை?
Union Budget 2023 on business sector:2023-24ம் நிதியாண்டுக்கான ம்த்திய பட்ஜெட்டில் நாட்டின் சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகையை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
1:23 PM
மத்திய பட்ஜெட் 2023 : மொபைல், டிவி விலை குறைகிறது... தங்கம், சிகரெட் விலை உயர்கிறது - முழு விவரம் இதோ
செல்போன், கேமரா லென்ஸ், டிவி, லித்தியம் பேட்டரி போன்றவற்றுக்கான சுங்க வரி விலக்கு மேலும் ஒரு வருடத்திற்கு தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
1:23 PM
11.4 கோடி விவசாயிகளுக்கு நிதி
ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 11.7 கோடி வீட்டு கழிப்பறைகள் கட்டப்படுள்ளன
உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
102 கோடி பேருக்கு 220 கோடி கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளன
47.8 கோடி பேருக்கு பிரதமர் ஜன்தன் வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன
PM சுரக்ஷாவின் கீழ் 44.6 கோடி நபர்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது
11.4 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் 2.2 லட்சம் கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1:23 PM
ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!
2013-14 நிதியாண்டில் செய்யப்பட்ட செலவீனத்தை விட, இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஒன்பது மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 வரை, ரயில்வேயின் மூலதனச் செலவு ஆண்டுக்கு 45,980 கோடியாக இருந்தது. தற்போது நாடு முழுவதும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில், திட்ட முதலீடு அதிகரிக்கும் மற்றும் ரயில்வே கட்டமைப்பு தேசிய வளர்ச்சியின் கருவியாக வெளிப்படும்.
1:06 PM
Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்கள், முதியவர்களுக்கான புதிய சேமிப்புத் திட்டங்கள்
மத்திய பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அதிக லாபம் தரும் புதிய அஞ்சல்துறை சேமிப்புத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
1:06 PM
Income Tax Budget 2023:பட்ஜெட் 2023: வருமானவரி உச்சவரம்பு விலக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சமாக உயர்வு: முழுவிவரம்
Income Tax Budget 2023:மாத வருமானம் ஈட்டுவோருக்கு மிகப்பெரிய நிம்மதியளிக்கும் வகையில் புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமானவரி செலுத்தத் தேவையில்லை
12:52 PM
பெட்ரோல், டீசல் விலை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை
மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை
12:43 PM
Health Sector Budget 2023 LIVE: சுகாதாரத்திற்கு மத்திய பட்ஜெட்டில் சலுகை; சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுகாதாரம், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பிரிவுகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
12:39 PM
ரூ. 7 - 9 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு 5% வரி
7 லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை. 3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு எந்த வரியும் இல்லை. ரூ. 7 - 9 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு 5% வரியும், ரூ12 - 15 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 15% வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டும்.
12:36 PM
50 முக்கியமான சுற்றுலா இடங்கள் தேர்வு செய்து மேம்படுத்த திட்டம்
சுற்றுலா மேம்பாட்டிற்காக 50 முக்கியமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:33 PM
வரும் நிதியாண்டில் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு
வரும் நிதியாண்டில் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக -மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:31 PM
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு உயர்வு
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:30 PM
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டம் மூலம் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்!
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (One District One Product) என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.
12:28 PM
சிகரெட்டுகளுக்கான வரி உயர்வு
சிகரெட்டுகளுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மற்ற புகையிலைப் பொருட்களின் விலையும் 16% வரை உயர்கிறது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:26 PM
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருமான வரித்தாக்கலுக்கான படிவம் எளிமையாக்கி புதுப்பிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
12:25 PM
ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை.. நிதியமைச்சர் அறிவிப்பு
ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
12:23 PM
டிவி பேனல், செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி குறைப்பு
டிவி பேனல், செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி, 21% இருந்து 13%-ஆக குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:23 PM
6.50 கோடி பேர் வருமான வரி தாக்கல்
நாட்டில் நடப்பு நிதியாண்டில், 6.50 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:22 PM
தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு
தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
12:20 PM
பேட்டரிக்கான சுங்கவரி 13% ஆக குறைப்பு
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 13% ஆக குறைப்பு
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:17 PM
மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்!
மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்
12:14 PM
பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம்
பெண்கள் 7.5% வட்டி விகிதத்தில், ரூ.2 லட்சம் வரை சேமிப்பதற்கான புதிய சேமிப்பு திட்டம் கொண்டுவரப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:07 PM
வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள்
வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
12:04 PM
5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள்
5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:01 PM
மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி
மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:00 PM
நிர்மலா சீதாராமன் பேச்சால் சிரிப்பலை
மாசடைந்த பழைய வாகனங்களை மாற்றுவது தொடர்பான அறிவிப்பின் போது நிர்மலா சீதாராமன் பேச்சால் சிரிப்பலை. பழைய மாசடைந்த வாகனம் என்பதை மாற்ற Old Polluted என்று கூறுவதற்கு பதில் old Political என்று நிர்மலா கூறினார் .
11:57 AM
இயற்கை உரங்களை ஊக்குவிக்க புதிய திட்டம் உருவாக்கப்படும்
இயற்கை உரங்களை ஊக்குவிக்க "பிஎம் பிரணாம்" என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
11:55 AM
அனைத்து நகரங்களிலும் எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை
நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் ஒட்டுமொத்தமாக எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
11:52 AM
KYC நடைமுறைகள் எளிமையாக்கப்படும்
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் KYC நடைமுறைகள் எளிமையாக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
11:51 AM
அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு தேவை
அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
11:49 AM
ரூ.7,000 கோடியில் மின்னணு நீதிமன்றங்கள்
ரூ.7,000 கோடியில் மின்னணு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
11:47 AM
PM AWAS YOJNA
2024 நிதியாண்டில் PM AWAS YOJNA 66% அதிகரித்து 79,000 கோடியாக ஆக இருக்கும்.
11:47 AM
மூலதன முதலீட்டு செலவு
FY24ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% மூலதன முதலீட்டு செலவாக இருக்கும்
11:46 AM
கர்நாடகா மாநிலம் நீர்ப்பாசனம்
கர்நாடகா மாநிலம் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் அந்த மாநிலத்தின் நீர்ப்பாசனத்திற்கு 5,300 கோடி மத்திய உதவித்தொகை அறிவிப்பு
11:45 AM
7 முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன
1. ஒருங்கிணைந்த வளர்ச்சி
2. அனைவரையும் சென்றடைதல்
3. உள்கட்டமைப்பு முதலீடு
4. திறன் வெளிக்கொணர்தல்
5. பசுமை புரட்சி
6. இளைஞர் சக்தி
7. நிதித்துறை
11:44 AM
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
11:43 AM
வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்
50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
11:42 AM
கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ.5,300 கோடி
கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ.5,300 கோடி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
11:39 AM
நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டம்
நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11:37 AM
ரயில்வே துறைக்காக ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள். ரயில்வே துறைக்காக ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:34 AM
அடுத்த 3 ஆண்டுகளில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
அடுத்த 3 ஆண்டுகளில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
11:33 AM
157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்
157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும். ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11:30 AM
குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகம்
குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
11:28 AM
1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
11:28 AM
2,200 கோடியில் தரமான தாவர விதைகள்
2,200 கோடி செலவில், அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களுக்கு நோயற்ற தரமான நடவுப் பொருள் கிடைப்பதை மேம்படுத்துவதற்காக ஆத்மாநிர்பர் தூய்மையான தாவரத் திட்டத்தை அரசாங்கம் தொடங்கும்.
11:27 AM
’வேளாண்துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேளாண் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். நாட்டின் முதுகெலுமபான விவசாயத்துறையை ஊக்குவிக்க வேளாண்துறை மூலம் 20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
11:26 AM
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமானது கிராமப்புற பெண்களை 1 லட்சம் பேர் கொண்ட சுய உதவிக்குழுக்களாகத் திரட்டுவதன் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
11:25 AM
விவசாயத்துக்கு கடன் வழங்க 2 லட்சம் கோடி ஒதுக்கீடு
விவசாயத்துக்கு கடன் வழங்க 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
11:22 AM
ஜன்தன் கணக்குகள் திறப்பு
9.6 கோடி பேருக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 102 கோடி பேருக்கு 220 கோடி கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. 47.8 கோடி பேருக்கு ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
11:21 AM
2023-24 பட்ஜெட்டில் இளைஞர்கள், நிதித்துறை மேம்பாடுக்கு முன்னுரிமை
2023-24 பட்ஜெட்டில் உள்ளடக்கிய மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, பசுமை வளர்ச்சி, இளைஞர்கள், நிதித்துறை மேம்பாடு ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11:21 AM
நடப்பு பட்ஜெட் முக்கியத்துவம்
நடப்பு 2023-2024 பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, சாத்தியக்கூறுகளை கட்டவிழ்த்து விடுதல், பசுமை வளர்ச்சி, இளைஞர் மற்றும் நிதித்துறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
11:19 AM
11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை
11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. 014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது.
11:17 AM
உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி சிலிண்டர் இணைப்புகள்
உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுவச் பாரத் திட்டத்தின் கீழ் 11.7 கோடி கழிவறைகள் கட்டி சாதனை படைத்துள்ளோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
11:15 AM
தனிநபர் வருமானம் இரட்டிப்பு
2014 முதல் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை அரசு உறுதி செய்துள்ளது. தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த 9 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் உலகில் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது: நிர்மலா சீதாராமன்
11:15 AM
உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு
உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
11:13 AM
G20.. உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தும்
உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11:13 AM
EPFO உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பு
EPFO உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது மூலம் இந்தியப் பொருளாதாரம் மிகவும் முறைப்படுத்தப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்
11:13 AM
இந்தியாவுக்கு G20 தலைவர் பதவி
G20 தலைவர் பதவி இந்தியாவிற்கு ஒரு புதிய உலக அமைப்பை வலுப்படுத்த உதவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும்: நிர்மலா சீதாராமன்
11:11 AM
9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேற்றம்
9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது.
11:10 AM
உணவு தானியங்கள் வழங்கினோம்
கொரோனா தொற்றுநோய்களின் போது, 28 மாதங்களுக்கு 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தின் மூலம் யாரும் பசியுடன் படுக்கைக்குச் செல்லாததை நாங்கள் உறுதி செய்தோம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் #UnionBudget2023
11:06 AM
பொருளாதார வளர்ச்சி
இந்தியப் பொருளாதாரத்தை பிரகாசமான ஒன்றாக உலகம் அங்கீகரித்துள்ளது. நமது பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது: நிர்மலா சீதாராமன்
11:05 AM
விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவரும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட்.. நிர்மலா சீதாராமன்
இது அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட்; விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவரும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.
11:03 AM
வசூல் ராஜாவான ஜிஎஸ்டி; நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.50 லட்சம் கோடி தாண்டியது!!
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஜனவரி மாதத்தில் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டி, நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.55 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
மேலும் படிக்க
11:00 AM
தலைசிறந்த பட்ஜெட்டாக இருக்கும்
இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் தலைசிறந்த பட்ஜெட்டாக இருக்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
10:44 AM
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இன்னும் சிறிது நேரத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
10:38 AM
நடப்பாண்டில் ஆவணங்கள் வந்தடைந்தன
பாரம்பரியமாக, நிதியமைச்சர் வருவதற்கு முன்பே பட்ஜெட் நகல்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்படும் நிலையில், இந்த ஆண்டு கோவிட்-19 நெறிமுறையைப் பின்பற்றி ஆவணங்கள் அச்சிடப்படமாட்டாது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று ஆவணங்கள் கொண்டு வரப்பட்டன.
10:34 AM
நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி அமைச்சரவை அனுமதி அளித்த பின்னர்தான் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அதற்காக நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். இதையடுத்து, பட்ஜெட் அமர்வில் பங்கேற்பார்.
10:23 AM
Share Market Live Today: பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு, நிப்டி ஜோர்
Share Market Live Today: மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.
10:22 AM
பட்ஜெட் என்றால் என்ன? இன்றைய பட்ஜெட் செய்திகளுக்குள் செல்வதற்கு முன்பு இதை நீங்கள் தெரிந்து இருக்க வேண்டும்!!
சிவப்பு நிற சேலை அணிந்து, கையில் சிவப்பு நிற பர்ஸ் கொண்டு வந்து இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி முர்முவை சந்தித்து நாடாளுமன்றத்துக்கு வருகிறார். இந்த நிலையில் பட்ஜெட் என்றால் என்ன? எதற்காக தாக்கல் செய்யப்படுகிறது என்பதை அனைவரும் அறிந்து இருக்க வேண்டும்.
10:10 AM
நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.
10:05 AM
சிவப்பு நிற சேலை.. சிவப்பு நிற சின்ன சூட்கேஸ்.. பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2வது முறையாகப் பதவி ஏற்று 4-வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இந்நிலையில், சிவப்பு நிற சேலை அணிந்து, கையில் சிவப்பு நிற சின்ன சூட்கேஸ் கொண்டு வந்து இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
9:53 AM
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சக அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
9:26 AM
பட்ஜெட் ஆவணங்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புறப்பட்டார்
பட்ஜெட் ஆவணங்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புறப்பட்டார். காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக நாடாளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய பட்ஜெட் ஒப்புதல் பெறப்படும்.
7:55 AM
Economic Survey 2022-23:இந்தியப் பொருளாதாரம் 6.5% வளர்ச்சி அடையும்: பொருளாதார ஆய்வறிக்கையின் அம்சங்கள் என்ன?
இந்தியப் பொருளாதாரம் 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி அடையும். உலகளவில் வேகமாகவளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருக்கும் என்று 2022-23 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
7:36 AM
Budget 2023இந்தியாவில் அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார்? நிர்மலா சீதாராமன் எத்தனையாவது பட்ஜெட்?
இந்தியாவில் இதுவரை அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார் என்பதையும், நிர்மலா சீதாராமன் எத்தனையாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பதையும் காணலாம்.
7:20 AM
Union Budget 2023: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழர்கள் யார் யார்?
சுதந்திர இந்தியாவில் இதுவரை ஆறு தமிழர்கள் மத்திய நிதி அமைச்சர்களாக இருந்து மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
11:53 PM
ஓபிஎஸ் எடுத்த கடைசி அஸ்திரம் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த பன்னீர் அணி !!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ளது. திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர் அறிவித்துள்ள நிலையில் அதிமுக யாரை வேட்பாளராக அறிவிக்கும் என்பதே கேள்வியாக இருக்கிறது.
11:25 PM
திருட்டு சம்பவம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது - கோவையில் அதிர்ச்சி சம்பவம்
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
10:27 PM
வருமானவரி செலுத்துவோரில் 80C பிரிவில் விலக்கு ரூ.ஒரு லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக கடந்த 2014ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன்பின் உயர்த்தப்படவில்லை. தற்போது நாட்டின் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு 80சி பிரிவு விலக்கின் வரம் ரூ.2.50 லட்சம் அதிகபட்சம் ரூ.3. லட்சமாக உயர்த்த கோரிக்கை இருக்கிறது
10:27 PM
ரயில்வே பட்ஜெட்டுக்கான தொகை இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. ஏறக்குறைய ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படலாம். ரயில்வே துறையை நவீனப்படுத்துதல், ரயில் தயாரிப்பான கட்டமைப்பை மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடித்தலுக்கு முக்கியத்துவம் தரலாம். ஹைட்ரஜன் எரிவாயுவில் ஓடும் ரயில் குறித்து அறிவிப்பு வரலாம். வந்தே பாரத் ரயில்கள் புதிய வழித்தடத்தில் அறிவிக்கப்படலாம்.
10:26 PM
2014ம் ஆண்டிலிருந்து வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.2.50 லட்சத்துக்கு மேல் உயர்த்தவில்லை. இந்த முறை குறைந்தபட்சம் ரூ.4லட்சம் அல்லது ரூ.5 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் வருமானவரிக் குறைப்பும் இருக்கலாம் எனத் தெரிகிறது
10:26 PM
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட்
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 5வது முழுபட்ஜெட் இதுவாகும்.
10:26 PM
வேலையின்மை குறைந்து வருகிறது. வேலைவாய்ப்புகள் சூடுபிடித்து கொரோனாவுக்கு முந்தையநிலையை எட்டியுள்ளது. நகர்ப்புறங்களில் வேலையின்மை 2020-21ல் 4.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது
10:25 PM
GDP 6 To 6.8% இருக்கும் என மதிப்பீடு
பொருளாதார அய்வறிக்கையைில் வரும் 2023-24ம் நிதிஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
4:13 PM IST:
தங்கம், வெள்ளி மற்றும் வைரங்கள் போன்றவற்றின் விலை உயர்த்தப்படும் என்பதையும் பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதுதவிர சிகரெட்டுகளின் விலை அதிகரிக்கப்படும் என்றார்.
3:28 PM IST:
3:23 PM IST:
3:20 PM IST:
நாடு முழுவதும் 50 முக்கிய சுற்றுலாத் தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மாவட்டம் தோறும் மாவட்ட தலைநகரத்திலும் மக்கள் அதிகம் வருகை தரும் சுற்றுலா மையங்களிலும் ‘யூனிட்டி மால்’கள் அமைக்கப்படும். இங்கு ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யப்படும்.
3:19 PM IST:
செல்போன், கேமரா லென்ஸ், டிவி, லித்தியம் பேட்டரி போன்றவற்றுக்கான சுங்க வரி விலக்கு மேலும் ஒரு வருடத்திற்கு தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
3:18 PM IST:
கருணாநிதிக்கு பேனா வைக்க வேண்டுமென்றால் அறிவாலயத்தில் வைக்கலாம் அல்லது வேறு ஒரு இடத்தில் வைக்கலாம் சுற்றுச்சூழலை பாதித்து கடலில் வைக்கக்கூடாது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
2:58 PM IST:
Union Budget 2023 on business sector:2023-24ம் நிதியாண்டுக்கான ம்த்திய பட்ஜெட்டில் நாட்டின் சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகையை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
1:23 PM IST:
செல்போன், கேமரா லென்ஸ், டிவி, லித்தியம் பேட்டரி போன்றவற்றுக்கான சுங்க வரி விலக்கு மேலும் ஒரு வருடத்திற்கு தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
1:23 PM IST:
ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 11.7 கோடி வீட்டு கழிப்பறைகள் கட்டப்படுள்ளன
உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன
102 கோடி பேருக்கு 220 கோடி கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளன
47.8 கோடி பேருக்கு பிரதமர் ஜன்தன் வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன
PM சுரக்ஷாவின் கீழ் 44.6 கோடி நபர்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது
11.4 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் 2.2 லட்சம் கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1:23 PM IST:
2013-14 நிதியாண்டில் செய்யப்பட்ட செலவீனத்தை விட, இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ஒன்பது மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 வரை, ரயில்வேயின் மூலதனச் செலவு ஆண்டுக்கு 45,980 கோடியாக இருந்தது. தற்போது நாடு முழுவதும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில், திட்ட முதலீடு அதிகரிக்கும் மற்றும் ரயில்வே கட்டமைப்பு தேசிய வளர்ச்சியின் கருவியாக வெளிப்படும்.
1:06 PM IST:
மத்திய பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அதிக லாபம் தரும் புதிய அஞ்சல்துறை சேமிப்புத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
1:06 PM IST:
Income Tax Budget 2023:மாத வருமானம் ஈட்டுவோருக்கு மிகப்பெரிய நிம்மதியளிக்கும் வகையில் புதிய வருமான வரி முறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமானவரி செலுத்தத் தேவையில்லை
12:52 PM IST:
மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை
12:43 PM IST:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுகாதாரம், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பிரிவுகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
12:39 PM IST:
7 லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி இல்லை. 3 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு எந்த வரியும் இல்லை. ரூ. 7 - 9 லட்சம் வரை ஈட்டுபவர்களுக்கு 5% வரியும், ரூ12 - 15 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 15% வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டும்.
12:36 PM IST:
சுற்றுலா மேம்பாட்டிற்காக 50 முக்கியமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளன - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:33 PM IST:
வரும் நிதியாண்டில் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக -மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:31 PM IST:
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:31 PM IST:
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (One District One Product) என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.
12:28 PM IST:
சிகரெட்டுகளுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, மற்ற புகையிலைப் பொருட்களின் விலையும் 16% வரை உயர்கிறது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:26 PM IST:
தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வருமான வரித்தாக்கலுக்கான படிவம் எளிமையாக்கி புதுப்பிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
12:25 PM IST:
ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
12:23 PM IST:
டிவி பேனல், செல்போன் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி, 21% இருந்து 13%-ஆக குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:22 PM IST:
நாட்டில் நடப்பு நிதியாண்டில், 6.50 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:22 PM IST:
தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
12:20 PM IST:
மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 13% ஆக குறைப்பு
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:17 PM IST:
மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்
12:14 PM IST:
பெண்கள் 7.5% வட்டி விகிதத்தில், ரூ.2 லட்சம் வரை சேமிப்பதற்கான புதிய சேமிப்பு திட்டம் கொண்டுவரப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:07 PM IST:
வங்கி செயல்முறையை மேலும் சிறப்பாக்க வங்கி முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
12:04 PM IST:
5ஜி சேவைகளுக்கான செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:01 PM IST:
மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
12:00 PM IST:
மாசடைந்த பழைய வாகனங்களை மாற்றுவது தொடர்பான அறிவிப்பின் போது நிர்மலா சீதாராமன் பேச்சால் சிரிப்பலை. பழைய மாசடைந்த வாகனம் என்பதை மாற்ற Old Polluted என்று கூறுவதற்கு பதில் old Political என்று நிர்மலா கூறினார் .
11:57 AM IST:
இயற்கை உரங்களை ஊக்குவிக்க "பிஎம் பிரணாம்" என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
11:55 AM IST:
நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் ஒட்டுமொத்தமாக எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற நடவடிக்கை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
11:52 AM IST:
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் KYC நடைமுறைகள் எளிமையாக்கப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
11:51 AM IST:
அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
11:49 AM IST:
ரூ.7,000 கோடியில் மின்னணு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
11:47 AM IST:
2024 நிதியாண்டில் PM AWAS YOJNA 66% அதிகரித்து 79,000 கோடியாக ஆக இருக்கும்.
11:47 AM IST:
FY24ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% மூலதன முதலீட்டு செலவாக இருக்கும்
11:46 AM IST:
கர்நாடகா மாநிலம் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் அந்த மாநிலத்தின் நீர்ப்பாசனத்திற்கு 5,300 கோடி மத்திய உதவித்தொகை அறிவிப்பு
11:45 AM IST:
1. ஒருங்கிணைந்த வளர்ச்சி
2. அனைவரையும் சென்றடைதல்
3. உள்கட்டமைப்பு முதலீடு
4. திறன் வெளிக்கொணர்தல்
5. பசுமை புரட்சி
6. இளைஞர் சக்தி
7. நிதித்துறை
11:44 AM IST:
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
11:43 AM IST:
50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
11:42 AM IST:
கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ.5,300 கோடி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
11:39 AM IST:
நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11:37 AM IST:
பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள். ரயில்வே துறைக்காக ரூ.2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
11:34 AM IST:
அடுத்த 3 ஆண்டுகளில் பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
11:33 AM IST:
157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும். ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11:30 AM IST:
குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
11:28 AM IST:
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
11:28 AM IST:
2,200 கோடி செலவில், அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களுக்கு நோயற்ற தரமான நடவுப் பொருள் கிடைப்பதை மேம்படுத்துவதற்காக ஆத்மாநிர்பர் தூய்மையான தாவரத் திட்டத்தை அரசாங்கம் தொடங்கும்.
11:27 AM IST:
விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேளாண் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும். நாட்டின் முதுகெலுமபான விவசாயத்துறையை ஊக்குவிக்க வேளாண்துறை மூலம் 20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
11:26 AM IST:
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமானது கிராமப்புற பெண்களை 1 லட்சம் பேர் கொண்ட சுய உதவிக்குழுக்களாகத் திரட்டுவதன் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
11:25 AM IST:
விவசாயத்துக்கு கடன் வழங்க 2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
11:22 AM IST:
9.6 கோடி பேருக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 102 கோடி பேருக்கு 220 கோடி கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. 47.8 கோடி பேருக்கு ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
11:21 AM IST:
2023-24 பட்ஜெட்டில் உள்ளடக்கிய மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, பசுமை வளர்ச்சி, இளைஞர்கள், நிதித்துறை மேம்பாடு ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11:21 AM IST:
நடப்பு 2023-2024 பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, சாத்தியக்கூறுகளை கட்டவிழ்த்து விடுதல், பசுமை வளர்ச்சி, இளைஞர் மற்றும் நிதித்துறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
11:19 AM IST:
11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. 014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது.
11:17 AM IST:
உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுவச் பாரத் திட்டத்தின் கீழ் 11.7 கோடி கழிவறைகள் கட்டி சாதனை படைத்துள்ளோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
11:15 AM IST:
2014 முதல் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை அரசு உறுதி செய்துள்ளது. தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த 9 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் உலகில் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது: நிர்மலா சீதாராமன்
11:15 AM IST:
உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
11:13 AM IST:
உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
11:13 AM IST:
EPFO உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது மூலம் இந்தியப் பொருளாதாரம் மிகவும் முறைப்படுத்தப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்
11:13 AM IST:
G20 தலைவர் பதவி இந்தியாவிற்கு ஒரு புதிய உலக அமைப்பை வலுப்படுத்த உதவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும்: நிர்மலா சீதாராமன்
11:11 AM IST:
9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது.
11:10 AM IST:
கொரோனா தொற்றுநோய்களின் போது, 28 மாதங்களுக்கு 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தின் மூலம் யாரும் பசியுடன் படுக்கைக்குச் செல்லாததை நாங்கள் உறுதி செய்தோம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் #UnionBudget2023
11:06 AM IST:
இந்தியப் பொருளாதாரத்தை பிரகாசமான ஒன்றாக உலகம் அங்கீகரித்துள்ளது. நமது பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது: நிர்மலா சீதாராமன்
11:05 AM IST:
இது அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட்; விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவரும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.
11:03 AM IST:
இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஜனவரி மாதத்தில் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டி, நடப்பு நிதியாண்டில் மூன்றாவது முறையாக ரூ.1.55 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
மேலும் படிக்க
11:00 AM IST:
இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் தலைசிறந்த பட்ஜெட்டாக இருக்கும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
10:47 AM IST:
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இன்னும் சிறிது நேரத்தில் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
10:48 AM IST:
பாரம்பரியமாக, நிதியமைச்சர் வருவதற்கு முன்பே பட்ஜெட் நகல்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்படும் நிலையில், இந்த ஆண்டு கோவிட்-19 நெறிமுறையைப் பின்பற்றி ஆவணங்கள் அச்சிடப்படமாட்டாது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று ஆவணங்கள் கொண்டு வரப்பட்டன.
10:36 AM IST:
பிரதமர் மோடி அமைச்சரவை அனுமதி அளித்த பின்னர்தான் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். அதற்காக நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். இதையடுத்து, பட்ஜெட் அமர்வில் பங்கேற்பார்.
10:23 AM IST:
Share Market Live Today: மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதையடுத்து, மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.
10:32 AM IST:
சிவப்பு நிற சேலை அணிந்து, கையில் சிவப்பு நிற பர்ஸ் கொண்டு வந்து இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு ஜனாதிபதி முர்முவை சந்தித்து நாடாளுமன்றத்துக்கு வருகிறார். இந்த நிலையில் பட்ஜெட் என்றால் என்ன? எதற்காக தாக்கல் செய்யப்படுகிறது என்பதை அனைவரும் அறிந்து இருக்க வேண்டும்.
10:10 AM IST:
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.
10:07 AM IST:
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2வது முறையாகப் பதவி ஏற்று 4-வது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இந்நிலையில், சிவப்பு நிற சேலை அணிந்து, கையில் சிவப்பு நிற சின்ன சூட்கேஸ் கொண்டு வந்து இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
9:55 AM IST:
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சக அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
9:26 AM IST:
பட்ஜெட் ஆவணங்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புறப்பட்டார். காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக நாடாளுமன்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய பட்ஜெட் ஒப்புதல் பெறப்படும்.
7:55 AM IST:
இந்தியப் பொருளாதாரம் 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி அடையும். உலகளவில் வேகமாகவளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இருக்கும் என்று 2022-23 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
7:36 AM IST:
இந்தியாவில் இதுவரை அதிகமாக பட்ஜெட் தாக்கல் செய்த நிதிஅமைச்சர் யார் என்பதையும், நிர்மலா சீதாராமன் எத்தனையாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பதையும் காணலாம்.
7:20 AM IST:
சுதந்திர இந்தியாவில் இதுவரை ஆறு தமிழர்கள் மத்திய நிதி அமைச்சர்களாக இருந்து மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.
11:53 PM IST:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தற்போது சூடுபிடித்துள்ளது. திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர் அறிவித்துள்ள நிலையில் அதிமுக யாரை வேட்பாளராக அறிவிக்கும் என்பதே கேள்வியாக இருக்கிறது.
11:25 PM IST:
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
10:27 PM IST:
வருமானவரி செலுத்துவோரில் 80C பிரிவில் விலக்கு ரூ.ஒரு லட்சத்தில் இருந்து ரூ.1.50 லட்சமாக கடந்த 2014ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன்பின் உயர்த்தப்படவில்லை. தற்போது நாட்டின் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு 80சி பிரிவு விலக்கின் வரம் ரூ.2.50 லட்சம் அதிகபட்சம் ரூ.3. லட்சமாக உயர்த்த கோரிக்கை இருக்கிறது
10:27 PM IST:
ரயில்வே பட்ஜெட்டுக்கான தொகை இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. ஏறக்குறைய ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படலாம். ரயில்வே துறையை நவீனப்படுத்துதல், ரயில் தயாரிப்பான கட்டமைப்பை மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடித்தலுக்கு முக்கியத்துவம் தரலாம். ஹைட்ரஜன் எரிவாயுவில் ஓடும் ரயில் குறித்து அறிவிப்பு வரலாம். வந்தே பாரத் ரயில்கள் புதிய வழித்தடத்தில் அறிவிக்கப்படலாம்.
10:26 PM IST:
2014ம் ஆண்டிலிருந்து வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.2.50 லட்சத்துக்கு மேல் உயர்த்தவில்லை. இந்த முறை குறைந்தபட்சம் ரூ.4லட்சம் அல்லது ரூ.5 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் வருமானவரிக் குறைப்பும் இருக்கலாம் எனத் தெரிகிறது
10:26 PM IST:
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 5வது முழுபட்ஜெட் இதுவாகும்.
10:26 PM IST:
வேலையின்மை குறைந்து வருகிறது. வேலைவாய்ப்புகள் சூடுபிடித்து கொரோனாவுக்கு முந்தையநிலையை எட்டியுள்ளது. நகர்ப்புறங்களில் வேலையின்மை 2020-21ல் 4.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது
10:25 PM IST: