
பெண்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் ஒன்று உத்யோகினி திட்டம். இந்தத் திட்டம் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி வங்கிகளால் தொடங்கப்பட்ட திட்டமாகும். பெண்களுக்கான இந்தத் திட்டம் அரசு மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து வங்கி சாரா நிதி நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பெண்கள் சுய தொழில் செய்வதற்கும், விவசாய நடவடிக்கைகளுக்கு கடன் பெறலாம்.
உத்யோகினி திட்டம் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குகிறது. இதன் மூலம் பெண்கள் ரூ.3 லட்சம் வரை கடன் பெற்று தொழில் தொடங்கலாம். ஊனமுற்ற பெண்கள் மற்றும் விதவைகளுக்கு கடன் வரம்பு இல்லை. பெண்கள் செய்ய உள்ள தொழில் மற்றும் அவர்களின் தகுதியைப் பொறுத்து, அவர்கள் அதிக கடன்களைப் பெறலாம்.
உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம்? இந்த விதியை தெரிஞ்சுக்கோங்க!
உத்யோகினி திட்டத்தின் பலனைப் பெற விரும்பும் பெண்களின் வயது 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் கிடைக்கும். இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும். இத்திட்டத்தின் கீழ், சொந்தமாக தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்தி வரும் பெண்களுக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது. உத்யோகினி திட்டம் என்பது பெண்கள் தொழில்முனைவோராகவும், தொழிலதிபர்களாகவும் உருவாகி அவர்கள் சொந்தக் காலில் நிற்க உதவும் திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில் நாடு முழுவதும் செயல்படுத்தியது. முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் பொருளாதார தன்னம்பிக்கைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 48,000 பெண்கள் பயன்பெற்று சிறுதொழில் முனைவோராக சிறந்து விளங்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் தலித் பெண்களுக்கு முற்றிலும் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. மற்ற பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் பெண் கடனைப் பெறும் வங்கியின் விதிமுறைகளைப் பொறுத்தது. மேலும், குடும்ப ஆண்டு வருமானத்தைப் பொறுத்து 30 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் (SC - ST) மற்றும் உடல் ஊனமுற்ற பெண்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகளுக்கு ஏற்ற SSY.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு சலுகைகள் இருக்கா?
இந்தத் திட்டத்தின் கீழ், சொந்தத் தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதனுடன், ஏற்கனவே தொழில் உள்ள பெண்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற முடியும். இந்தத் திட்டம் அரசு, தனியார் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் (NBFCs) சுயாதீனமாக நடத்தப்படுகிறது.
பல அரசு மற்றும் தனியார் வங்கிகளில் தொழில்துறை கடன்கள் எளிதாக கிடைக்கின்றன. இது தவிர, உத்யோகினி திட்டத்தின் கீழ், அனைத்து வணிக வங்கிகள், அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) உத்யோகினி கடன் பெறலாம்.
உத்யோகினி திட்டம் - யார் தகுதியானவர்?
உத்யோகினி திட்டம் : என்னென்ன ஆவணங்கள் தேவை
விண்ணப்பிக்கும் முறை
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.