
Donald Trump Tax on Aluminum Imports: : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) திங்களன்று அனைத்து வகையான இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிகளின் மீதும் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வார இறுதியில் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ ஆர்லியன்ஸில் NFL சூப்பர் பவுலுக்குச் செல்லும் வழியில் ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், செவ்வாயன்று பரஸ்பர வரிகள் அறிவிக்கப்படும் என்றார். இது கிட்டத்தட்ட உடனடியாக நடைமுறைக்கு வரும். அமெரிக்கா மற்ற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு இணையான வரியை விதிக்கும். இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். "அவர்கள் எங்களிடம் வரி வசூலித்தால், நாங்கள் அவர்களிடம் வரி வசூலிப்போம்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியர்களை வெளியேற்ற தொடங்கிய அமெரிக்கா; டொனால்ட் டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை
2016-2020ல் தனது முதல் பதவிக் காலத்திலும் டிரம்ப் ஸ்டீல் மற்றும் அலுமினியத்தின் மீது வரி விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஸ்டீலுக்கு 25% மற்றும் அலுமினியத்திற்கு 10% வரி விதித்தார். பின்னர் டிரம்ப் கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல வர்த்தக கூட்டு நாடுகளுக்கு வரி இல்லாத ஒதுக்கீட்டை வழங்கினார். முன்னாள் அதிபர் ஜோ பைடன் இந்த ஒதுக்கீட்டை பிரிட்டன், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீட்டித்தார்.
அமெரிக்கா ஸ்டீல் மற்றும் அலுமினியத்தின் மீது வரி விதிப்பதால் கனடா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளின் பிரச்சனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கனடா, பிரேசில் மற்றும் மெக்சிகோ அமெரிக்காவுக்கு அதிகளவில் ஸ்டீல் ஏற்றுமதி செய்கிறது. இதைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் வியட்நாம் உள்ளன. அமெரிக்காவிற்கு கனடா அதிகளவில் அலுமினிய உலோகம் அனுப்பும் நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 2024 முதல் 11 மாதங்களில் மொத்த இறக்குமதியில் 79 சதவீதம் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மெக்சிகோ அலுமினிய ஸ்கிராப் மற்றும் அலுமினிய அலாய்யின் முக்கிய சப்ளையர்.
அமெரிக்கா சீனா மீண்டும் வர்த்தகப் போர்; கூகுள் மீது விசாரணைக்கு பீஜிங் உத்தரவு!!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.