
டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் ஆட்சிக்கு வந்துள்ளதைப் போல் உங்களது வாழககியும் ஒருநாள் பிரகாசிக்கும். நீங்களும் பங்குச் சந்தையில் இதுபோன்ற பலனை எதிர்பார்த்தால், ஒரு அரசு பங்கை (PSU Stock) உங்களது போர்ட்ஃபோலியோவில் சேர்க்கவும். அந்த வகையில் நிபுணர்கள் NMDC பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளனர்.
நுவாமா நிறுவனம் NMDC பங்கு மீது நம்பிக்கைதெரிவித்துள்ளது. இந்தப் பங்கை வாங்குவதற்கு பரிந்துரைத்துள்ளது மற்றும் இதன் இலக்கு விலையையும் நிர்ணயித்துள்ளது.
நவரத்னா நிறுவனமான NMDC இரும்புத் தாதுவின் மிகப்பெரிய உற்பத்தியாளர். முக்கியமாக சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகாவில் சுரங்கங்களை இயக்குகிறது மற்றும் சொந்தமாக வைத்துள்ளது. 45 MTPA இலிருந்து 100 MTPA ஆக உற்பத்தித் திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
எவ்வளவு சம்பளம் வாங்கியும் பத்தலயா.. பணத்தை இப்படி பட்ஜெட் போடுங்க! நோ கவலை!
NMDC நிறுவனத்திற்கு டிசம்பர் காலாண்டில் 30% வளர்ச்சியுடன் நிகர லாபம் ரூ.1,944 கோடி. நிறுவனத்தின் வருவாய் 21% அதிகரித்து ரூ.6,531 கோடி. EBITDA 22% வளர்ச்சியுடன் ரூ.2783 கோடி.
டிசம்பர் காலாண்டு முடிவுகளின்படி, NMDC லிமிடெட் நிறுவனத்தின் இரும்புத் தாது உற்பத்தி 9% அதிகரித்து 132.91 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. விற்பனை 5% வளர்ச்சியுடன் 119.36 லட்சம் டன்கள்.
பிப்ரவரி 7, வெள்ளிக்கிழமை, NMDC பங்கு 2.30% உயர்ந்து ரூ.66.63ல் முடிவடைந்தது. நுவாமா நிறுவனம் இப்பங்கில் நம்பிக்கையுடன் உள்ளது. வாங்க பரிந்துரை வழங்கியுள்ளது.
நுவாமா நிறுவனம் NMDC பங்கின் இலக்கு விலையை ரூ.85 என நிர்ணயித்துள்ளது, இது தற்போதைய விலையை விட 30% அதிகம்.
ரூ.1-க்கும் குறைவான பங்கு 3 வருடத்தில் 900% அள்ளிக் கொடுத்தது!
NMDC பங்கின் 52 வார உயர்நிலை ரூ.95 மற்றும் 52 வார குறைந்தபட்ச நிலை ரூ.60, ஜனவரி 13 அன்று இந்த நிலையை எட்டியது.
நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் EBITDA 15-20% வளர்ச்சியடையக்கூடும் என்று நுவாமா கூறுகிறது. இரும்புத் தாது அளவு மற்றும் விலை இரண்டும் இதை ஆதரிக்கக்கூடும்.
எந்தவொரு முதலீட்டையும் செய்வதற்கு முன்பு உங்கள் சந்தை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
நீங்களும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை வைத்திருக்க விரும்பினால் உங்களுக்கு பங்குச் சந்தை நிபுணர்கள் பரிந்துரை செய்யும் பங்கு NMDC.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.