அசத்தல் விற்பனை - புது மைல்கல் எட்டிய கார்கள் - மகிழ்ச்சியில் டொயோட்டா

By Kevin KaarkiFirst Published Jan 29, 2022, 6:05 PM IST
Highlights

டொயோட்டா நிறுவனத்தின் கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் கார்கள் இணைந்து இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியது.

டொயோட்டா நிறுவனம் தனது கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் கார்கள் இணைந்து இந்திய சந்தையில் ஒரு லட்சம் யூனிட்களுக்கு அதிகமாக விற்பனையாகி இருப்பதாக தெரிவித்து உள்ளது. இரு கார் மாடல்களும் இந்தியாவில் 2019 இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. டொயோட்டா வாடிக்கையாளர்கள் மத்தியில் இரு மாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றன.

கிளான்சா மட்டும் இந்திய சந்தையில் 65 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையான நிலையில், அர்பன் குரூயிசர் மாடல் 35 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. முதல் முறை டொயோட்டா வாடிக்கையாளர்களில் 66 சதவீதம் பேர் கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களை வாங்கியுள்ளனர். இரு மாடல்களும் 2 மற்றும் 3 கட்ட சந்ததைகளில் குறிப்பிடத்தக்க யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

இந்தியாவில் இரு மாடல்களும் பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் மெயிண்டனன்ஸ் 60, கியூ சர்வீஸ், எக்ஸ்டெண்டட் வாரண்டி மற்றும் சர்வீஸ் பேக்கேஜ் போன்ற சலுகைகளுடன் வழங்கப்படுகின்றன. 

"வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை அதிகபட்ச அளவில் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதில் டொயோட்டா பெருமை கொள்கிறது. காரை வைத்திருப்பதில் சிறந்த அனுபவம், அமோக விற்பனை மற்றும் சிறப்பான சர்வீஸ் உள்ளிட்டவைகளை டொயோட்டா வழங்குவதற்கு சிறந்த உதாரணமாக இந்த விற்பனை மைல்கல் அமைந்துள்ளது," என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு துணை தலைவர் அதுல் சூட் தெரிவித்தார். 

"கிளான்சா மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்கள் இந்திய விற்பனையில் கடந்த ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. கிளான்சா மாடல் விற்பனை கடந்த ஆண்டு மட்டும் 25 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இரு மாடல்களும் இளம் வாடிக்கையாளர்களை பெற உதவியுள்ளன," என அவர் மேலும் தெரிவித்தார். 

click me!