ஜூலை 18, 2025: ரூ.100-க்குள் கிடைக்கும் சிறந்த பங்குகள்! திட்டமிட்டு வாங்கினால் கொட்டும் வருமானம்!

Published : Jul 18, 2025, 07:47 AM IST
Multibagger share shilchar technologies

சுருக்கம்

குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் தரக்கூடிய ரூ.100-க்குள் கிடைக்கும் பங்குகளின் பட்டியல் மற்றும் அவற்றின் நிறுவன பின்னணி. Suzlon Energy, IDFC First Bank, Bank of Maharashtra போன்ற பங்குகள் இதில் அடங்கும்.

சமீப காலமாக இந்திய பங்குச்சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு சாதகமான பலன்களை தந்து வருகிறது. அதுவும் குறைந்த பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய பங்குச் சந்தையில் குறைந்த முதலீட்டுடன் நல்ல வருமானம் தரக்கூடிய பங்குகளைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு, ரூ.100-க்குள் கிடைக்கக்கூடிய சில பங்குகள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. இன்று ஜூலை 18, 2025 தேதிக்கான பங்குகளின் பட்டியலும், அவற்றின் நிறுவன பின்னணியும்தான் இங்கு விரிவாக வழங்கப்பட்டுள்ளது.

 Suzlon Energy (₹66) 

புதுப்பிக்கத்தக்க மின்சாரத் துறையில் முன்னணியில் உள்ளது Suzlon Energy. குறிப்பாக காற்றாலை மூலம் மின்உற்பத்தியில் Suzlon மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. பசுமை ஆற்றலுக்கான மத்திய அரசின் ஆதரவால், இந்த பங்கிற்கு எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. 

வாங்கும் விலை: ₹64–₹67 | ஸ்டாப் லாஸ்: ₹58 | இலக்கு விலை: ₹78

IDFC First Bank (₹73.5) 

IDFC First Bank வாடிக்கையாளருக்கேற்ப வட்டி வழங்கும் முறையில் தனித்துவம் பெற்றது. அதன் நிகர வட்டி வருவாய் நிலையாக உள்ளதால் வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

வாங்கும் விலை: ₹72–₹75 | ஸ்டாப் லாஸ்: ₹66 | இலக்கு விலை: ₹85

Bank of Maharashtra (₹57) 

அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் Bank of Maharashtra, சிறந்த பண மேலாண்மை மற்றும் பாதுகாப்பான கடனளிப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

வாங்கும் விலை: ₹55–₹58 | ஸ்டாப் லாஸ்: ₹50 | இலக்கு விலை: ₹68

Ujjivan Small Finance Bank (₹49) 

சிறு மற்றும் குறுநிறுவனங்களுக்கு நிதி உதவிகளை வழங்கும் வங்கி Ujjivan Small Finance Bank. இதன் NPA அளவு குறைவாக இருப்பது முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. 

வாங்கும் விலை: ₹47–₹50 | ஸ்டாப் லாஸ்: ₹42 | இலக்கு விலை: ₹60

Shree Renuka Sugars (₹32) 

இந்த நிறுவனம் சர்க்கரை மற்றும் எத்தனால் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் எத்தனால் தேவை அதிகரித்து வருவதால்,  Shree Renuka Sugars வளர்ச்சி பாதையில் செல்கிறது. 

வாங்கும் விலை: ₹30–₹33 | ஸ்டாப் லாஸ்: ₹26 | இலக்கு விலை: ₹42

IRB Infrastructure Developers (₹48.4) 

சாலை மேம்பாட்டு திட்டங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம். மத்திய மற்றும் மாநில அரசின் பொது தனியார் கூட்டுத் திட்டங்களில் பெரிய பங்குகள் பெற்றுள்ளது. 

வாங்கும் விலை: ₹47–₹49.5 | ஸ்டாப் லாஸ்: ₹43 | இலக்கு விலை: ₹60

NHPC Ltd (₹84) 

நீர்மின் உற்பத்தியில் இந்திய அரசின் முக்கியமான பொது துறை நிறுவனம். நிலையான வருமானம் மற்றும் உயர் டிவிடெண்ட் யீல்ட் உள்ளதால் பாதுகாப்பான முதலீடு என கருதப்படுகிறது. 

வாங்கும் விலை: ₹82–₹85 | ஸ்டாப் லாஸ்: ₹75 | இலக்கு விலை: ₹96

Vodafone Idea (₹7.5) 

தொலைத்தொடர்பு துறையில் எதிர்பார்க்கப்படும் turnaround story. புதிய முதலீடுகள் மற்றும் ரீஸ்ட்ரக்ச்சரிங் முயற்சிகள் மூலம் வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. 

வாங்கும் விலை: ₹7–₹7.8 | ஸ்டாப் லாஸ்: ₹6.2 | இலக்கு விலை: ₹10

Indian Overseas Bank (₹40) 

அரசு வங்கியான இந்த நிறுவனம், கட்டுப்பாட்டுக்குள் கடன் தரத்தைக் கொண்டிருப்பதுடன், நல்ல வருமானத்தை ஈட்டி வருவதால் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

வாங்கும் விலை: ₹39–₹41 | ஸ்டாப் லாஸ்: ₹34 | இலக்கு விலை: ₹52

Yes Bank (₹20) 

உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு பிறகு, Yes Bank தனது டிஜிட்டல் வங்கிச் சேவைகள் மற்றும் கார்ப்பரேட் கடனளிப்பு சேவைகளில் புதிய பக்கம் திரும்பியுள்ளது. 

வாங்கும் விலை: ₹19–₹21 | ஸ்டாப் லாஸ்: ₹16.5 | இலக்கு விலை: ₹28

இங்கு குறிப்பிட்டுள்ளவை குறைந்த விலை பங்குகள் என்பதால் அதிகப் பாதிப்பு (volatility) ஏற்படும். எனவே, ஒவ்வொரு பங்குக்கும் ஸ்டாப் லாஸ் கடைபிடிக்கவும். சரியான பங்கு பகிர்வு மற்றும் பங்குகளை ஆராய்ந்து முதலீடு செய்யவும்.கவனமாகவும் அதிக ஆசைப்படாமலும் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை லாபத்தை கொடுக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Govt Training: நகை கடனை இனி நீங்கதான் கொடுக்க போறீங்க.! 5 நாட்களில் நகை மதிப்பீட்டாளராக சிறந்த வாய்ப்பு.!
ஆயிரம் முதல் ரூ.10,000 வரை அபராதம்.. ஓட்டுநர்கள் கவனத்திற்கு.. விதிகளை மறக்காதீங்க