
மத்திய அரசின் கீழ் செயல்படும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி (SEBI – Securities and Exchange Board of India) தற்போது ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய மதிப்பீட்டு முறைகளை ஒரே நிலைக்கு கொண்டு வரும் வகையில் அமைந்துள்ளது.
தற்போதைய நிலை இதுதான்!
தற்போது, மியூச்சுவல் பண்டுகள் மற்றும் இ.டி.எப். (ETF) நிறுவனங்கள் தங்கம், வெள்ளிக்கு மதிப்பீடு செய்ய லண்டன் புலியன் மார்க்கெட் அசோசியேஷன் (LBMA) விலைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகின்றன. டாலர் மதிப்பை ரூபாய்க்கு மாற்றுதல், சுங்க வரி சேர்த்தல், சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தை வேறுபாடுகள் ஆயவற்றை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகின்றன.அதே சமயம், டெரிவேட்டிவ் மற்றும் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பிற பொருட்களுக்கு இந்திய சந்தை விலைகள் (Domestic Prices) பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஒரே தங்கம்/வெள்ளிக்கு இரு மாறுபட்ட மதிப்பீட்டு முறைகள் நிலவுகின்றன.
செபியின் புதிய முடிவு
இந்நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மதிப்பீட்டில் ஒரே முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என செபி பரிந்துரைக்கிறது. இனி உள்நாட்டு விலைகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.இதன் மூலம் பொதுவான விலை நிர்ணய முறை உருவாகும். மதிப்பீட்டுச் செயல்முறை எளிமை பெறும்.முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் மற்றும் நம்பிக்கை ஏற்படும்.
பொதுமக்கள் கருத்து
இந்த பரிந்துரையைப் பற்றி, ஆகஸ்ட் 6, 2025 வரை பொதுமக்களும், முதலீட்டாளர்களும் தங்களது கருத்துக்களை செபிக்கு தெரிவிக்கலாம். இது ஒரு திறந்த கருத்துக் கேட்பு நடைமுறை.
பொதுமக்களுக்கு & முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை?
செபி எடுத்துள்ள இந்த பரிந்துரை, தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு நம்பகமான மதிப்பீடு மற்றும் நீடித்த முதலீட்டு பாதுகாப்பு அளிக்கும். சர்வதேச விலை அல்லாமல், நம் சந்தையின் அடிப்படையில் விலையை மதிப்பீடு செய்வது எதிர்காலத்தில் இந்திய சந்தை சுயாதீனமடைந்ததாகும் என்பதை உறுதி செய்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.