நீங்கள் விண்ணப்பிக்கும் வங்கியைப் பொறுத்து வீட்டுக் கடன் வட்டி விகிதம் மாறுபடும். மேலும் உங்கள் சிபில் ஸ்கோர் மற்றும் பிற காரணிகளுடன் தொடர்புடைய ரிஸ்க் பிரீமியத்தைப் பொறுத்தது வட்டி விகிதம் மாறும்.
பெரும்பாலான வங்கிகள் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்திற்கு ஏற்ப, ஃப்ளோட்டிங் விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகின்றன. வயது, தகுதி, வருமானம், மனைவியின் வருமானம், ஸ்திரத்தன்மை மற்றும் உங்கள் தொழிலின் வருமானம், சொத்துக்கள் மற்றும் வாங்குவதற்கு முன்மொழியப்பட்ட சொத்தின் மதிப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. நீங்கள் விண்ணப்பிக்கும் வங்கியைப் பொறுத்து வீட்டுக் கடன் வட்டி விகிதம் மாறுபடும். மேலும் உங்கள் சிபில் ஸ்கோர் மற்றும் பிற காரணிகளுடன் தொடர்புடைய ரிஸ்க் பிரீமியத்தைப் பொறுத்தது வட்டி விகிதம் மாறும்.
EMI
அசல் மற்றும் வட்டி இரண்டையும் உள்ளடக்கிய சமமான மாதாந்திர தவணைகளில் (EMIs) கடன் திருப்பிச் செலுத்தப்படுகிறது. நீங்கள் முழுப் பணத்தைப் பெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு EMI செலுத்த வேண்டும். எனினும் சந்தை வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப EMI மாறுபடும். சந்தை விகிதங்கள் உயர்ந்தால் உங்கள் EMI அதிகரிக்கும்.
கட்டணம்
வீட்டுக் கடன்களுக்கு வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு முறை கட்டணத்தை வசூலிக்கின்றன. இது பெரும்பாலும் கடனாளியால் தனித்தனியாக செலுத்தப்படுகிறது. மேலும் இந்த தொகை கடன் தொகையில் இருந்து கழிக்கப்படாது. சிறப்பு ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, சில வங்கிகள் வீட்டுக் கடனுக்கான இந்தச் செயலாக்கக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்யலாம்.
மற்ற கட்டணங்கள்
எனினும் சில வங்கிகள் செயலாக்கக் கட்டணத்துடன் சேர்த்து சில கட்டணங்களை கூடுதலாக விதிக்கின்றன.
“பெரும்பாலான வங்கிகள் மொத்த தொகையை செலுத்துவதன் மூலம் கால அட்டவணைக்கு முன்னதாகவே வீட்டுக்கடனைத் திருப்பிச் செலுத்த அனுமதிக்கின்றன. இருப்பினும், பல வங்கிகள் அசல் தொகையில் 2-3% வரை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதற்கான அபராதம் விதிக்கின்றன. முன்பணம் செலுத்தும் அபராதம், வங்கிக்கு வங்கி மாறுபடலாம். முன்பணம் செலுத்துவதற்காக வேறொரு வங்கியில் இருந்து கடனைப் பெற்றால், உங்கள் சொந்த மூலங்களிலிருந்து நீங்கள் செலுத்தும் கட்டணத்தை விட கட்டணம் பொதுவாக அதிகமாக இருக்கும். எனவே வீட்டுக்கடன் வாங்கும் போது பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை சரிபார்த்து, அதில் குறைவாக உள்ள வங்கியை தேர்வு செய்யலாம்.
குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்கும் டாப் 10 வங்கிகள்
HDFC வங்கி : 8.5% முதல் 9.4% வரை
இந்தியன் வங்கி : 8.5% முதல் 9.9% வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி : 8.5% முதல் 10.1% வரை
இண்டஸ் இந்த் வங்கி : 8.5% முதல் 10.55% வரை
பேங்க் ஆஃப் இந்தியா : 8.5% முதல் 10.6% வரை
ஐடிபிஐ வங்கி : 8.55% முதல் 10.75% வரை
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா : 8.6% முதல் 10.3% வரை
பேங்க் ஆஃப் பரோடா : 8.6% முதல் 10.5% வரை
SBI கால கடன் 8.75+CRP 8.7% 9.65% வரை
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா : 8.7% முதல் 10.8% வரை