அமேசான் நிறுவனத்தின் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் 6ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த விற்பனை வரும் 10ம் தேதிவரை நடக்கும்.
அமேசான் நிறுவனத்தின் கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் சேல் 6ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த விற்பனை வரும் 10ம் தேதிவரை நடக்கும்.
இந்த சிறப்பு விற்பனையில் 75சதவீதம் வரை செல்போன், எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைப் பொருட்களுக்கு தள்ளுபடி தரப்பட உள்ளது.
அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் வழக்கம் போல் 24 மணிநேரத்துக்கு முன்பாகவே அதாவது 5ம்தேதி(இன்று) பொருட்களை சலுகை விலையில் ஆர்டர் செய்யலாம்.
ஆட்குறைப்பில் இறங்கிய வால்மார்ட் : அமெரிக்காவை ஆட்டம் காண வைக்கும் பணவீக்கம், ரிஷசென்
அமேசான் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ செல்போன், எலெக்ட்ரானிக்ஸ், பேஷன், சமையலுக்கு பயன்படும் பொருட்கள், டிவி, மளிகைப் பொருட்கள் உளளிட்டவற்றுக்கு விற்பனையாளர்கள் ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளனர். இவை அனைத்தும் அமேசான்.இன் தளத்தில் உள்ளது. கிரேட் ப்ரீடம் பெஸ்டிவல் விற்பனையில் எல்ஜி, பேம்பர்ஸ், LEGO, டெக்னோ உள்ளிட்ட ஏராளமான நிறுவநங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக நகை, பணம் எவ்வளவு வெச்சுருக்கலாம்? வருமானவரித் துறையிடம் சிக்காமல் இருக்க இதைப்படிங்க
இந்தவிற்பனையில் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு, இஎம்ஐ கார்டு ஆகியவை மூலம் பொருட்கள் வாங்கினால் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி தரப்படும். பஜாஜ் பின்சர்வ் இஎம்ஐ கார்டு, அமேசான் பே ஐசிஐசிஐ கார்டு, அமேசான் பே லேட்டர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினாலும் இஎம்ஐ கட்டணம் இல்லை.
செல்போன் மற்றும் அக்சஸசரீஸ் பொருட்களுக்கு அதிபட்சம் 40 % தள்ளுபடியும், ஜியோமி செல்போன்களுக்கு 40 % தள்ளுபடியும் தரப்பட உள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 75 %வரை தள்ளுபடியும், குழந்தைகளுக்கான டயாபர்ஸ், வைப்ஸ் ஆகியவற்றுக்கு 51 சதவீதம் தள்ளுபடியும், பர்னிச்சர்களுக்கு 54 % தள்ளுபடியும் தரப்பட உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைப்பு: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
5 நாட்கள் நடக்கும் அமேசான் தள்ளுபடி விற்பனையில் அடுத்துவரும் நாட்களில் கூடுதலாக பொருட்கள் சேர்க்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பொருட்களை எக்சேஞ்ச் செய்யும் வசதியும் இந்த தள்ளுபடி விற்பனையில் அறிமுகமாக உள்ளது. மொபைல், லேப்டாப், டிவி ஆகியவற்றை எக்சேஞ்ச் செய்யும்முன், அது செயல்படுகிறதா என்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.