தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
தங்கம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். குறிப்பாக பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை தொடர்ந்து 3வது நாட்களாக குறைந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,875-க்கு விற்பனையானது.
இன்றைய (ஜூலை 25) நிலவரப்படி கோவையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,440-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,885-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,080-ஆக விற்பனையாகிறது.
இதையும் படிங்க: Today Gold Rate in Chennai: 3 நாட்களில் ரூ.3,240 குறைந்த தங்கம் விலை! இதுதான் நல்ல சான்ஸ்! விட்டுடாதீங்க.!
வெள்ளி விலை மூன்று ரூபாய் குறைந்து கிராம் வெள்ளி ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.