தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான அடிப்படை சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6% சதவீதமாக குறைக்கப்டும் என பட்ஜெட் 2024-2025-ல் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தங்கம், வெள்ளிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதுவே தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த நேரமாம். நிபுணர்கள் சொல்லும் தகவல்கள் இதோ..
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அதைத்தொடர்ந்து நடப்பு 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், விலைமதிப்பற்ற உலோகங்கள், தங்கம்/வெள்ளி மற்றும் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள், நாணயங்கள் மீதான அடிப்படை சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு சந்தேகத்திற்கு இடமின்றி முதலீட்டாளர்களுக்கு சாதகமான நேரம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இது தங்கத்தின் விலை குறைவதற்கு வழிவகுக்கும் என்றும், தங்கத்தின் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது உகந்த நேரம் என்றும் தெரிவிக்கின்றனர்.
மூலதன பொருட்கள் மீது சுங்க வரி குறைப்பு
தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளின் நாணயங்கள் மீதான அடிப்படை சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. தங்கம் மற்றும் வெள்ளி தாதுக்களின் வரியும் 14.35 சதவீதத்தில் இருந்து 5.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?
சுங்க வரி குறைப்பின் தாக்கம்
குறையும் தங்கம் விலை : பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து தங்கத்தின் விலை உடனடியாக குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் நல்லது.
அதிகரிக்கும் தேவை : தங்கத்தின் விலை குறைவால், முதலீடு மற்றும் நுகர்வு நோக்கங்களுக்காக தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
விலை ஏற்ற இறக்கம் : வரிக் குறைப்பு சாதகமான காரணியாக இருந்தாலும், தங்கத்தின் விலையானது பல்வேறு உலகப் பொருளாதார நிலைமைகள், புவிசார் அரசியல் நிகழ்வுகள் மற்றும் முதலீட்டாளர்களின் உணர்கள் போன்ற காரணிகளால் வரையறுக்கப்படுகிறது. எனவே, தங்கத்தில் விலையில் ஏற்றத் தாழ்வுகள் தொடரும்.
தங்கத்தில் இப்போது முதலீடு செய்வது நல்லதா?
தங்கம் உங்களுக்கு ஏற்ற முதலீடாக உள்ளதா என்பது உங்கள் தனிப்பட்ட நிதி இலக்குகள், நிதி இழப்பு அபாயங்கள், மற்றும் முதலீட்டு எல்லையைப் பொறுத்தது.
தங்கத்தின் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும் என MMTC-PAMP இன் MD & CEO விகாஸ் சிங் கூறியுள்ளார். இது தங்க நகைளின் சில்லறை விலையை குறைக்கும் மற்றும் கள்ளச் சந்தையை தடுக்கும் என்றும் கூறினார்.
இந்த வரிக் குறைப்பு, அரசின் கருவூலத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் மற்றும் தங்கத்தின் மையமாக கொண்டு இந்தியாவின் வளர்ச்சியை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று சிங் கூறியுள்ளார்.
Today Gold Rate In Chennai:இறக்குமதி வரி குறைப்பு! சரமாரியாக சரியும் தங்கம் விலை! நகைக்கடையில் குவியும் மக்கள்
தங்கம் வெள்ளி மீதான வரிக்குறைப்பு,
தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரிகளை குறைத்திருப்பதன் மூலம் உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்ப்பதாக ராகவேந்திர நாத், MD, Ladderup Wealth Management தெரிவித்துள்ளார்.
வரி குறைப்பு - வரவேற்கும் தொழிற்துறை
பாஜக அரசின் இந்த நடவடிக்கையை, ரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறை வரவேற்றுள்ளது, இது உள்ளீட்டுச் செலவுகளைக் குறைக்கும், மதிப்புக் கூட்டலை அதிகரிக்கும், ஏற்றுமதி போட்டித்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
FD Rate Hike: மூத்த குடிமக்களுக்கு இப்போது 7.90 சதவீத வட்டி கிடைக்கும்.. எந்த பேங்க் தெரியுமா?