- Home
- Gallery
- Today Gold Rate In Chennai:இறக்குமதி வரி குறைப்பு! சரமாரியாக சரியும் தங்கம் விலை! நகைக்கடையில் குவியும் மக்கள்
Today Gold Rate In Chennai:இறக்குமதி வரி குறைப்பு! சரமாரியாக சரியும் தங்கம் விலை! நகைக்கடையில் குவியும் மக்கள்
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து விலை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தங்கம் விலை குறைந்து வருகிறது.

Union Budget 2024
3வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜக அரசு நேற்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில், தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாகவும், பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 6.4 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.
Gold Rate
இதனால் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.4000 வரை குறையக்கூடும் என நகை வியாரிகள் கூறியிருந்தனர். அதன்படி நேற்றைய தினமே தங்கம் சவரனுக்கு ரூ. 2200 குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.2200 குறைந்து ரூ.52,400-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.6,550-க்கு விற்பனையானது.
Today Gold Rate
இன்றைய (ஜூலை 24) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,875-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,945-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,560-ஆக விற்பனையாகிறது.
Today Silver Rate
வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.