Gold Rate Today : அட்சய திருதியை முன்னிட்டு அதிரடியாக குறைந்த தங்க விலை..அடேங்கப்பா.! இவ்வளவு தானா ?

By Raghupati R  |  First Published May 3, 2022, 9:46 AM IST

Today gold rate in tamilnadu : தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. 


இந்த நாளில் தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.  இந்த நாளில் தங்கம் வாங்க ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டுவர்.ஏனெனில்,அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் பொன் செரும் என்பது நம்பிக்கை.

Tap to resize

Latest Videos

இன்றைய தங்க விலை :

தங்கம் மற்றும் வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்றைய விலையே தொடர்கிறது. இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,816 ஆக குறைந்து உள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 312 ரூபாய் குறைந்து 38,528 ஆக உள்ளது.

இன்றைய வெள்ளி விலை :

தங்கத்தை போலவே வெள்ளியும் விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67க்கும், ஒரு கிலோ வெள்ளி 67,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

இதையும் படிங்க : யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைக்குறது.. 1,500 கோடி கமிஷன் போகுது.! பகீர் கிளப்பும் எடப்பாடி பழனிசாமி

click me!