
ஒமைக்ரான் நோய் பரவலால் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருவதால், தங்கத்தின் விலை மாறி மாறி குறைந்தும், உயர்ந்தும் வருகிறது. தங்கத்தின் விலை தற்போது குறைந்து வருவதால், தங்கம் வாங்க நினைப்பவர்கள், உடனே வாங்க வேண்டிய நேரம் இது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 ரூபாய் குறைந்து, ரூ. 36,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து, ரூ.4,508 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையான இதில், எந்தவித மாற்றமும் இல்லாமல் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியில் சிறிது விலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 பைசா உயர்ந்து ரூ 65.40-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூபாய் 400 உயர்ந்து, ரூ. 65,400 க்கும் விற்பனை ஆகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.