
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்தை வாங்குவதில் பெண்களின் ஆர்வம் என்றைக்கும் குறைந்ததில்லை. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன ? என்று பார்க்கலாம்.
இன்றைய தங்க விலை :
இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,014 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 5,005 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 40,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 72 ரூபாய் அதிகரித்து 40,112 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை :
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.74.20 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 74,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.