Gold Rate Today : இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி !! சரசரவென உயரும் தங்க விலை.. எவ்வளவு தெரியுமா ?

Published : Apr 02, 2022, 10:21 AM IST
Gold Rate Today : இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி !! சரசரவென உயரும் தங்க விலை.. எவ்வளவு தெரியுமா ?

சுருக்கம்

Gold Rate Today : ரஷ்யா மீதான பொருளாதார தடைகள், பெரும்பாலான பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என்று கணிக்கப்பட்டது போன்றே உலகம் முழுவதும் விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.  இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்தை வாங்குவதில் பெண்களின் ஆர்வம் என்றைக்கும் குறைந்ததில்லை. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன ? என்று பார்க்கலாம். 

இன்றைய தங்க விலை :

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,835 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,834 ரூபாயாக இருந்தது.  அதேபோல, நேற்று 38,672  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 8 ரூபாய் அதிகரித்து 38,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை :

தங்கம் விலை இன்று அதிகரித்தாலும், வெள்ளி விலை சற்று குறைந்து உள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71.50 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 71,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?