GOLD RATE TODAY : அச்சச்சோ..? உச்சத்திற்கு செல்லும் தங்க விலை..இன்றைய தங்கம் & வெள்ளி விலை என்ன ?

By Raghupati RFirst Published Jan 21, 2022, 8:05 AM IST
Highlights

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் அதிகம். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,581 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,543 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,344  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 304 ரூபாய் அதிகரித்து 36,648 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.68.80 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,500 அதிகரித்து  68,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

click me!