GOLD RATE TODAY : நகை வாங்குறது ரொம் கஷ்டம்.. மீண்டும் ஏறும் முகத்தில் தங்கம்.. இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி.!

By vinoth kumarFirst Published Jan 15, 2022, 9:40 AM IST
Highlights

கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன. இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ. 4,531- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ. 36,248-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியில் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளியின் விலை ரூ 66.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 66,000 ஆக உள்ளது.

click me!