
நீங்க மனை வாங்கினது பெரிய விஷயமல்ல... "பட்டா இப்படி இல்லை" என்றால் கோவிந்தா தான் போங்க..!
குடும்ப பாகப்பிரிவினை மூலம் ஒருவருக்கு கிடைத்த மனை அல்லது வீட்டிற்கான பட்டா கண்டிப்பாக தேவை. அதாவது அந்த குறிப்பிட்ட சொத்து அவரது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அதனடிப்படையில் புதியதாக சம்பந்தப்பட்ட சொத்தை வாங்குபவர் அவரது பெயருக்கு பெயர் மாற்றம் செய்வது எளிதாக இருக்கும் .
பல்வேறு காரணங்களால் குடும்ப ரீதியாக பாகப்பிரிவினை செய்யப்பட்ட சொத்துக்கு முறையான உட்பிரிவு பட்டா வாங்காமல் இருக்கும் பட்சத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உரிமை கொண்டாடும் நிலையில் தான் பழைய பட்டா இருக்கும். இதுபோன்ற சமயத்தில் பாகப்பிரிவினை அடிப்படையில் பெறப்பட்ட பட்டா இல்லாத மனை அல்லது வீடு வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ பல சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே பட்டா விஷயத்தில் எந்த விதமான காலதாமதம் இருக்கக்கூடாது. சொத்தை விற்பனை செய்தவர் ஒருவேளை இறந்துவிட்டால் அவர் பெயரில் உள்ள பழைய பட்டாவை புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றுவது மிகவும் சிரமமானதாக மாறிவிடும். அதன்பிறகு அவரது வாரிசுகள் இருப்பின், அவர்களது உதவி தேவைப்படும் நிலையில் பெயர் மாற்றம் செய்வதும் சிக்கலான விஷயமாகவே மாறிவிடும்.
எனவே பாகப்பிரிவினை மூலம் கிடைத்த ஒரு சொத்துக்குரிய உட்பிரிவு பட்டா இருக்கும் நிலையில், அந்த சொத்தை வாங்கும் முடிவை எடுக்கலாம். அப்போது தான் சொத்தை கிரயப்பத்திரம் செய்த பிறகு அவர் பிறகு புதியதாக வாங்கியவர் பெயருக்கு மாற்றம் செய்வது மிகவும் சுலபமாக இருக்கும். எனவே மனையோ வீடோ...வாங்கிய உடன் அதற்கான பட்டா பெயரையும் கையோடு மாற்றிக் கொள்வது நல்லது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.