புதியதாக வீட்டு மனை வாங்கி உள்ளீர்களா..? இந்த அவசர செய்தி உங்களுக்கு தான்..!

By ezhil mozhiFirst Published Jan 25, 2019, 1:32 PM IST
Highlights

புதியதாக வீட்டு மனை வாங்கி உள்ளீர்களா..? இந்த அவசர செய்தி உங்களுக்கு தான்..! 

புதியதாக வீட்டு மனை வாங்கி  உள்ளீர்களா..? 

வீட்டுமனை வாங்க யாருக்கு தான் ஆர்வம் இல்லாமல் இருக்கும் சொல்லுங்கள். கிராமத்தில் வசிப்பவர்கள் கூட சென்னை போன்ற சிட்டியின் அருகிலாவது ஒரு மனை வாங்கியே ஆக வேண்டும் என  ஆர்வம் காண்பிக்கின்றனர். அவ்வாறு வாங்கும் மனைகள் பாதுகாப்பானதாக உள்ளது என்பதை எப்படி அறீவீர்கள்.. எங்கேயோ இருக்கும் நீங்கள், பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாம் வாங்கிய மனையின் பாதுகாப்பை எப்படி உறுதி படுத்துவார்கள்?

பாதுகாப்பு 

எல்லை கற்கள் நட்டு, மனையின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள். இதிலும் பக்கத்துக்கு மனையிலோ அல்லது அருகில் வேறு ஏதாவது கட்டிடம் கட்டும் போதோ நம் மனையில் சிறிய பகுதியை அவர்கள் சேர்த்து கட்ட கூட வாய்ப்பு உண்டு.

மனையிடத்தை கண்டுபிடிப்பதே சிரமம்

ஒரு சிலர் எல்லை கற்களை வைத்து மட்டுமே, மனையின் பாதுகாப்பை  உறுதிபடுத்துவார்கள். ஆனால் இந்த எல்லை கற்கள் எப்போதுமே அதே இடத்தில் இருக்குமா என்றால், இல்லை என்றே கூறலாம். காரணம் பல்வேறு காரணத்தினால் அங்குள்ள எல்லை கற்கள் காணாமல்  போயிருக்கும். அல்லது உடைந்து இருக்கலாம். யாரவது தோண்டி  எடுத்து வேறு இடத்திற்கு மாற்றி அமைத்து இருக்கலாம்.அப்படி என்றால் எல்லை பாதுகாப்பு  எவ்வளவு முக்கியம் என்பது  நமக்கு தெரிய வேண்டாமா ..?

நாம் வாங்கி இருக்கும் மனையின் நான்கு பக்கத்திலும், மூன்று அடியில் சிறிய சுவர் எழுப்பி, அதனை மஞ்சள் நிறத்தில்பெயிண்ட் செய்து கருப்பு நிற கலரில் உரிமையாளர் பெயர்,மனை எண் இரண்டையும் குறிப்பிட்டு வைப்பது ஆக சிறந்தது. 

பக்கத்து மனையில் வீடு கட்டும் போது,

ஒரு சிலர் அவர்களது மனையில் வீடு கட்டும் போது, செங்கல், ஜல்லி, மணல் என அனைத்தையும் நம் வீட்டு மனையில் கொட்டி வைத்து ஆக்கிரமிப்பு செய்வது மட்டுமல்லாமல், சில அடி இடங்களையும் சேர்ந்து வீடு கட்டி விடுவார்கள்.. விளைவு  நமக்கு தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கண்டிப்பாக நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்

ஆக மொத்தத்தில் ஒரு மனை வாங்கிவிட்டீர்கள் என்றால், அந்த இடத்தில் உங்களுக்கான வீட்டு கட்டுவதற்கு முன் அதனை முதலில் பாதுகாத்து வைக்க, மனையை சுற்றி வேலி அமைப்பது மிகவும் சிறந்தது. இல்லை என்றால் எல் வடிவில் பாதுகாப்பு சுவர் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அவ்வப்போது மனை இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்து வருவது சிறந்தது. இல்லை என்றால், போலி பத்திரம் மூலம் தெரியாதவர்களுக்கு நம் மனையை நமக்கே தெரியாமல் மற்றவர்களுக்கு எழுதி கொடுக்கும் அவல நிலை கூட பல இடங்களில் நிகழ்ந்துள்ளது. அதே சமயத்தில் அரசு சார்பாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால் பத்திரப்பதிவு பாதுகாப்பு ஓரளவிற்கு நிம்மதி கொடுக்கும்.

click me!