third party insurance : வாகன ஓட்டிகளே உஷார்! 3-ம் நபர் காப்பீடு ப்ரீமியம் இன்று முதல் உயர்கிறது

By Pothy RajFirst Published May 31, 2022, 2:55 PM IST
Highlights

third party insurance hike :மோட்டார் சைக்கிள், கார், கனரக வாகனங்கள், பேட்டரி கார்கள் ஆகியவற்றுக்கான 3-ம் நபர் காப்பீடு ப்ரீமியம் கட்டணம் உயர்வு நாளை(ஜூன்1) முதல் அமலுக்கு வருகிறது. 

மோட்டார் சைக்கிள், கார், கனரக வாகனங்கள், பேட்டரி கார்கள் ஆகியவற்றுக்கான 3-ம் நபர் காப்பீடு ப்ரீமியம் கட்டணம் உயர்வு நாளை(ஜூன்1) முதல் அமலுக்கு வருகிறது. 

3 ஆண்டுகளுக்குப்பின்

கடந்த 2019ம் ஆண்டுக்குப்பின் 3 ஆண்டுகளுக்குப்பின் 3ம் நபர் காப்பீடு ப்ரீமியம் கட்டணம் உயர்கிறது. பேட்டரியில்முழுமையாக இயங்கும் வாகனங்கள், ஹைபிரிட் வாகனங்கள், கல்வித்துறையில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்கு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 

3-ம் நபர் காப்பீடு

3-ம் நபர் காப்பீடு என்பது அனைத்து வாகனங்களுக்கும் எடுக்கும் காப்பீட்டைவிட இது முக்கியமாகும். வாகனக் காப்பீடு வாகனத்துக்கான சேதத்துக்கு மட்டுமே இழப்பீடு தரும், அந்த வாகனத்தால் விபத்தில் ஒருவருக்கு ஏற்படும் காயத்துக்கும், உயிரிழப்புக்கும் இழப்பீடு வராது. ஆதலால்தான் தேர்டு பார்டி இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயமாகிறது. வாகனக் காப்பீடு எடுப்பதைவிட தேர்டு பார்டி இன்சூரன்ஸ் மிகவும் முக்கியமாகும். 

மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கார்களுக்கான காப்பீடு

  • 1000 சிசி வரை-ரூ.2,094(ரூ.22 உயர்வு)
  • 1000சிசி முதல் ரூ.1500 சிசி வரை- ரூ.3,216(ரூ.195உயர்வு)
  • 1550சிசிக்கு அதிகமானது- ரூ.7,897(ரூ.7 மட்டும் உயர்வு

இருசக்கர வாகனங்கள்

  • 75 சிசி திறனுக்கு உட்பட்டவை: ரூ.538(ப்ரீமியம்)
  • 75 சிசி முதல் 150 சிசிவரை : ரூ.714 ப்ரீமியம் கட்டணம்
  • 150 சிசி முதல் 300 சிசிவரை பைக்குகள்: ரூ.1,366 ப்ரீமியம் கட்டணம்
  • 350 சிசிக்கு மேல் உள்ள பைக்குகள் :  ரூ.2,804 கட்டணம்

பேட்டரி கார்கள்

  • பேட்டரி வாகனங்களுக்கான அடிப்படை காப்பீடு ப்ரீமியம் உயர்த்தப்பட்டுள்ளது. 
  • 30 கிலோவாட் வரை உள்ள வாகனங்கள்: ரூ.1,780 ப்ரீமியம்
  • 30 முதல் 65 கிலோவாட் உள்ள கார்கள்: ரூ.2,904 கட்டணம்
  • 65 கிலோவாட்களுக்கு அதிகமான கார்கள்: ரூ.6,712 

பேட்டரி டூவீலர்கள்

  • இ-ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பிற பேட்டரி டூவீலர்களுக்கான காப்பீடு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது
  • 3 கிலோவாட்டுக்கு கீழ் டூவீலர்: ரூ.457 ப்ரீமியம் தொகை
  • 3 கிலோவாட் முதல் 7 கிலோவாட் வரை: ரூ.607 ப்ரீமியம்
  • 7 மதுல் 16 கிலோவாட் வரை : ரூ.1,161 கட்டணம்
  • இரு சக்கர வாகனங்களுக்கு ஆண்டு ப்ரீமியம் ரூ.2,383 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சலுகை: 
எலெக்ட்ரிக் கார்களுக்கு 15 சதவீதம் ப்ரீயமியத்தில் தள்ளுபடியும், மற்றும் ஹைபிரிட் வகை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 7 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான வாகனங்களுக்கு காப்பீடு 15 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது

சரக்கு வாகனங்கள்

  • 12டன்னுக்கு அதிகமாக 20 டன்னுக்குள் சுமை தூக்கும் இருக்கும் வாகனங்களுக்கு ப்ரீமியம் ரூ.33,414 லிருந்து ரூ.35,313 ஆக அதிகரிக்கிறது.
  • 40 டன்னுக்கு மேல் இழுக்கும் கனரக வாகனங்களுக்கான ப்ரிமியம் முன்பு ரூ.41,561ஆக இருந்தது, இனிமேல் ரூ.44,242 ஆக அதிகரிக்கும்.

இவ்வாறு சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது

click me!