1 june 2022: காப்பீடு முதல் வங்கி வரை: ஜூன் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் 7 பெரிய மாற்றங்கள் தெரியுமா?

Published : May 31, 2022, 02:18 PM ISTUpdated : Jun 01, 2022, 08:04 AM IST
1 june 2022: காப்பீடு முதல் வங்கி வரை: ஜூன் 1ம் தேதி  முதல்  நடைமுறைக்கு வரும் 7 பெரிய மாற்றங்கள் தெரியுமா?

சுருக்கம்

1 june 2022 :ஜூன் 1ம் தேதி முதல் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு முதல் வங்கி வட்டிவீதம் உயர்வுவரை 7 வகையான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. 

ஜூன் 1ம் தேதி முதல் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு முதல் வங்கி வட்டிவீதம் உயர்வுவரை 7 வகையான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. 

ஆக்சிஸ் வங்கி சேவைக் கட்டத்தை திருத்துகிறது, 1-ம் தேதி என்பதால் சிலிண்டர் விலை உயர்வு, ஏடிஎப் பெட்ரோல் விலை உள்ளிட்டவையும் சாமானியர்களை பாதிக்கும்.

எஸ்பிஐ வங்கி கடன் வட்டிவீதம் உயர்வு

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, கடனுக்கான வட்டி வீதத்தை 40புள்ளிகள் உயர்த்தி, 7.05 சதவீதமாக அதிகரித்தது. இந்த வட்டிவீத உயர்வு ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சேவைக் கட்டண உயர்வு

தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி, வங்கி மற்றும் வங்கி அல்லாத சேவைகளுக்கு வாடிக்கையாளர்களின் சேமிப்பு மற்றும் ஊதியக் கணக்கை பராமரித்தல் ஆகியவற்ரகு்கு வசூலிக்கும் சேவைக் கட்டணத்தை உயர்த்துகிறது. சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காமல் இருந்தால் அதற்குரிய அபராதம், சேவைக்கட்டணம், ஒவ்வொரு மாதமும் சேமிப்புக் கணக்கில் சராசரியாக வைத்திருக்க வேண்டிய தொகை அளவையும் உயர்த்துகிறது.

இவை அனைத்தும் ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி ஆக்சிஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு வத்திருப்போர் மாதசராசரியாக ரூ.15ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச இருப்பு கணக்கில் இல்லாவிட்டாலும் அதற்கு சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும்.

இரு சக்கர வாகனங்களுக்கு காப்பீடு

இரு சக்கர வாகனங்களுக்கு 3-ம் நபர் காப்பீடு உயர்வு நாளைமுதல் அமலுக்கு வருகிறது. 75சிசிக்கு குறைவாக இருக்கும் வாகனங்களுக்கு காப்பீடு ரூ.538ஆகவும், 150சிசிக்குமிகாமல் இருந்தால், ரூ714,  150சிசிக்கு அதிகமாக 350 சிசிக்கு குறைவாக இருந்தால், ரூ.1,366 ப்ரீமியம் செலுத்த வேண்டும். 350சிசிக்கு மேல் இருந்தால், ரூ.2,804 செலுத்த வேண்டும்

நான் சக்கர வாகனங்கள்

1000 சிசி திறன் எஞ்சின் கொண்ட கார்களுக்கு 3-ம்நபர் காப்பீடுரூ.2,094 ஆக உயர்கிறது. 1000 சிகிக்கு மேல், 15000 சிசிக்கு மிகாமல் இருந்தால் ரூ.3416 செலுத்த வேண்டும். எஞ்சின் திறன் 1500 சிசிக்கு அதிகமாக இருந்தால் ரூ.7897 ப்ரீமியமும் செலுத்த வேண்டும். 

பேட்டரி வாகனங்கள்

பேட்டரி கார்கள் 30 கிலோவாட் வரை இருந்தால்3ம் நபர் காப்பீடு ரூ.1780 ஆகவும், 30 கிலோவாட்டுக்கு அதிகமாகவும், 65க்கு மிகாமலும் இருந்தால், ப்ரீமியம் ரூ.2,904 ஆகவும் இருக்கும்.

ஏடிஎப் விலை உயர்வு
விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஏடிஎப் எரிபொருள் விலை மாதத்தின் முதல்தேதி, 16ம் தேதி மாற்றி அமைக்கப்படும். அந்தவகையில் மே 16ம் தேதி, 10-வது முறையாக ஏடிஎப் எரிபொருள் விலை உயர்ந்தது. ஒரு கிலோலிட்டர் ரூ.6,188க்கு விற்பனையாகிறது. 

தங்க நகைகளுக்கு ஹால்மார்க்

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பது கட்டாயம் என்பது 2-வது கட்டமாக ஜூன் 1ம் தேதி முதல் அமலாகிறது. தங்க நகைகள், கலைப்பொருட்கள்ஆகியவற்றுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இந்த உத்தரவு நாளைமுதல் 256 மாவட்டங்கள், 32 புதிய மாவட்டங்களில் அமலாகிறது. இந்த மாவட்டங்களில் இனிமேல் தங்க நகைகளை, 14,18,20,22,23,24 காரட் நகைகளை விற்றால் அதில் ஹால்மார்க் முத்திரை இருப்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது

இந்தியா போஸ்ட் வங்கி

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் ஆதார் கார்டு அடிப்படையிலான பேமெண்ட் செய்யும் வசதிக்கான சேவைக்கட்டணம் ஜூன்1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆனால், கட்டணம் ஜூன் 15ம் தேதிமுதல் வசூலிக்கப்படும். முதல் 3 ஆதார் அடிப்படையான பரிமாற்றங்களுக்கு கட்டணம் இல்லை, இதில் பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது, மினி ஸ்டேட்மென்ட் ஆகியவை அடங்கும். அதைத் தொடர்ந்து ஒவ்வொருமுறை பணம் செலுத்தினாலும், எடுத்தாலும் ரூ.20 சேவைக்கட்டணம், ஜிஎஸ்டி சேர்த்து விதிக்கப்படும். மினி ஸ்டேட்மென்ட் எடுக்க ரூ.5 ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?