
ஐபிஎல் டி20 தொடரைப் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது,அடுத்தவரும் சீசன்களுக்கான ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
15-வது ஐபிஎல் டி20 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஏலம்
இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைக்கான ஏலம் வரும் ஜூன் 12ம் தேதி நடக்க இருக்கிறது. 2023 முதல் 2027ம் ஆண்டுவரையிலான ஒளிபரப்பு உரிமைக்கு பிசிசிஐ நிர்ணயித்திருக்கும் ரிசர்வ் விலை ரூ.32,890 கோடிாயகும்.
ஏலத்தொகை கூடுதல்
இது கடந்த 5 ஆண்டுகளுக்கான தொகையிலிருந்து ஒரு மடங்கு கூடுதல்தான். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா, தி வால்ட் டிஷ்னி நிறுவனம் ஆகியவற்றுக்கு தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமத்தை வழங்கியிருந்தது.
முதன்முதலில் 10 ஆண்டுகளுக்கு சோனி பிக்சர்ஸ் குழுமம் ரூ.8200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது. இந்நிலையில் 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்க இருக்கிறது.
என 4 பிரிவுகளில் வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்த ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் பங்கேற்க இதுவரை 10 நிறுவனங்கள் பிசிசிஐ அமைப்பிடம் தலா ரூ.29.50 லட்சம் கட்டணத்தையும், விண்ணப்பத்தையும்அளித்துள்ளன. இந்தத் தொகை ஏலத்தில் பங்கேற்பதற்கானது, இது திரும்பத் தரப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனங்கள்
இந்த ஏலத்தில் டிஸ்னி-ஸ்டார், சோனி, ஜீஎன்டர்டைன்மென்ட், அமேசான், ஆப்பிள், கூகுள், ஸ்கே ஸ்போர்ட்ஸ், தென் ஆப்பிரிக்காவின் சூப்பர் ஸ்போர்ட் ஆகியவை விருப்ப மனுக்கள் வழங்கியுள்ளன.
ஆனால், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் பார்வையாளர்கள் போட்டியை காணும் அளவு குறைந்திருக்கிறது என்ற செய்தி, ஏலத்தில் ஒளிபரப்பு உரிமையை பாதிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பார்வையாளர்கள் குறைந்த நிலையில் அடிப்படைவிலையை பிசிசிஐ இவ்வளவு அதிகமாக வைக்கலாமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளன.
பார்வையாளர்கள் குறைவு
சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்கின் சிஇஓ என்பி சிங் அளித்த பேட்டியில் “ பார்வையாளர் அளவு குறைந்துவிட்ட நிலையில் ரிசர்வ் விலையில் மாற்றம் தேவை. ஐபிஎல் பார்வையாளர்கள் 30 முதல் 35 சதவீதம் அளவு முதல் 4 வாரங்களில் சரிந்துவிட்டதாக ஆய்வுகள் வருகின்றன. இது கடந்த சீசனைவிடக் குறைவாகும்” எனத் தெரிவித்துள்ளார்
பார்வையாளர்கள் குறைந்ததால், டிஸ்னி ஹாட்ஸ்டார் கூடுதலாக விளம்பர ஸ்லாட்டுகளை ஒதுக்க வேண்டும் என்று சில விளம்பரதாரர்கள் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
நீண்ட தொடர்
மாருதி சுஸூகி நிர்வாக இயக்குநர் ஷசாங் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “ முதல் 25 ஆட்டங்களில் டெலிவிஷன்ரேட்டிங், 22 முதல் 40 வயதுள்ள ஆண்களைக் குறிவைத்து விளம்பரம் செய்தோம். ஆனால், 58சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. நீண்டநாட்கள், அதிகமான போட்டிகளில் பார்வையாளர்களும், ரசிகர்களும் சலிப்படைந்துவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
இது தவிர நட்சத்திர வீரர்களான தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்த சீசனில் ஜொலிக்கவில்லை. அதிகமான ரசிகர்கள் கூட்டம் கொண்ட மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் செல்லாததும் பார்வையாளர்கள் அளவைக் குறைத்துள்ளது.
ஆதலால், பார்வையாளர்கள் குறைந்திருப்பது ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.