Sri Lanka Seeks Another $500 Million From India For Fuel :கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை, இந்தியாவிடம் மேலும் 50 கோடி டாலருக்கு பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை, இந்தியாவிடம் மேலும் 50 கோடி டாலருக்கு பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்தபின் முதல்முறையாக மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருகிறது. இலங்கை அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துவிட்டதால், வெளிநாட்டு கடன்களையும் திருப்பிச் செலுத்த முடியவில்லை, வெளிநாடுகளில் இருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது.
இதனால் இருக்கின்றன பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும்வகையில் உயர்ந்துவிட்டதால், மக்கள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து சாலையில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். மக்களின் வாழ்வாதாரம் நாசமாகிவட்டால், அரசுக்கு எதிராக கடந்த மார்ச் மாதத்திலிருந்து மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பெட்ரோல், டீசலை வெளிநாடுளில் இருந்து வாங்க முடியாத சூழலில் இருப்பதால், இந்தியாவிடம் கடந்த சில மாதங்களாக இலங்கை அரசு வாங்கி வருகிறது. இதுவரை 700 மில்லியன் டாலருக்கு பெட்ரோல், டீசலை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்நிலையில் மீண்டும்500 மில்லியன் டாலருக்கு பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலந்தா மொரகோடா, கடந்த வாரம் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பெட்ரோல், டீசல் உதவி வழங்கக் கோரியுள்ளார்.
இலங்கைக்கு ஏற்கெனவே ஏராளமான நிதியுதவிகளையும், பெட்ரோல், டீசலும், உணவுப் பொருட்களும் வழங்கியுள்ளது. இதனுடன் கூடுதலாக 100 கோடி டாலருக்கு அத்தியாவசியப் பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைக்க இருக்கிறது.
இந்தியா தொடரந்து இலங்கைக்கு அளித்துவரும் உதவிக்கு அந்நாட்டுப் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா செய்யும் உதவி இரு நாடுகளின் நட்புறவே மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கடினான நேரத்தில் எங்கள் நாட்டுக்கு இந்தியா அளித்து வரும் உதவியை நாங்கள் வரவேற்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் 25 டன் அத்தியாவசிய மருந்துகள், மாத்திரைகள், உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவக் கருவிகள் போன்றவற்றையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உதவியைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு நன்றி கூறியுள்ளார்.