tata: tata motors: குஜராத் ஃபோர்டு நிறுவனத்தை விலைக்கு வாங்குகிறது டாடா மோட்டார்ஸ்

By Pothy RajFirst Published May 31, 2022, 1:37 PM IST
Highlights

tata : tata motors: குஜராத்தில் உள்ள சனாந்தில் செயல்படும் ஃபோர்டு நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா பேசஞ்சர் எலெக்ட்ரிக் மொபைலிட்டி லிமிட் (டிபிஇஎம்எல்) விலைக்கு வாங்க இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குஜராத் அரசுடன் செய்யப்பட்டுள்ளது. 

குஜராத்தில் உள்ள சனாந்தில் செயல்படும் ஃபோர்டு நிறுவனத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா பேசஞ்சர் எலெக்ட்ரிக் மொபைலிட்டி லிமிட் (டிபிஇஎம்எல்) விலைக்கு வாங்க இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குஜராத் அரசுடன் செய்யப்பட்டுள்ளது. 

ஆனால், சென்னையில் செயல்படும் ஃபோர்டு நிறுவனத்தை எந்த நிறுவனம் கையகப்படுத்தப்போகிறது என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை. அமெரி்க்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி நிறுவனத்தில் பேட்டரிகார்களை தயாரிக்கதிட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது. 

ஆனால் திடீரென பல்டியடித்து, அவ்வாறு எந்தத்திட்டமும் இல்லை என்று ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து, குஜராத்தில் ஃபோர்டு நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஒப்பந்தத்தில் டாடா மோட்டார்ஸ் கையொப்பமிட்டுள்ளது.

குஜராத்தின் சதானந்த் நகரில் ஃபோர்டு நிறுவனம் அமைத்துள்ள கார் தொழிற்சாலையில் அஸ்பையர், ஃபிகோ கார்கள் தயாரிக்கப்பட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இங்கு ஏறக்குறைய 4ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். 

இந்நிலையில், தொடர் இழப்பு, மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளால் அதிகமான செலவு வரும்காலத்தில் ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி இந்தியாவில் இருந்து வெளியேறஇருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

இதே காரணத்தைக் கூறி வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து சென்னை மறைமலைநகரில் செயல்படும் தொழிற்சாலையை நிறுத்தப்போவதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், திடீரென பேட்டரி கார்களை தயாரிக்கப் போவதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்திருந்து அந்த அறிவிப்பிலிருந்தும் பின்வாங்கியது. 

குஜராத்தில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தை விலைக்கு வாங்கும்டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதில் புதிய எந்திரங்கள், நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி, ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை தயாரிக்கஇருப்பதாகத் தெரிவித்துள்ளது.இதை அதிகபட்சமாக 4 லட்சம் கார்கள் வரை உயர்த்தலாம் என்றும் நம்புகிறது.

தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் மாதத்துக்கு 50ஆயிரம் பேட்டரி கார்களை தயாரிக்கும் நிலையில் இருக்கிறது. 2026ம் ஆண்டுக்குள் இந்த திறனை 10பேட்டரி கொண்ட வாகனங்கள் தயாரிப்புவரை உயர்த்துவோம் எனத் தெரிவித்துள்ளது.

click me!