
இன்று முதல் 5௦ ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொள்ளலாம்.....
கருப்பு பண ஒழிப்பு
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக , பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து , புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
திரும்ப பெறப்பட்ட ரூபாய் மதிப்பை விட, புதியதாக புழக்கத்தில் விடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு குறைவு தான் . இதனால், பணத்தட்டுப்பாடு ஏற்படவே , வாங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.அதன்படி வாரத்திற்கு 24 ஆயிரம் மட்டுமே வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கும் விதி நடைமுறையில் இருந்தது.
சேமிப்பு கணக்கு :
சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் , வாரத்திற்கு 24 ஆயிரம் மட்டுமே வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கும் விதி நடைமுறையில் இருந்தது. ஆனால் தற்போது 5௦ ஆயிரம் வரை சேமிப்பு வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
இதற்கு முன்னதாக , கரன்ட் அக்கவுன்டிலிருந்து பணம் எடுபதற்கு இருந்த கட்டுப்பாடு முற்றிலும் தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காண கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
மேலும், சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முற்றிலும் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.