
பணமாக கொடுத்து நகை வாங்கினால் 1% மட்டும்தான் வரி
2016 – 2017 ஆம் நிதியாண்டு
5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணமாக கொடுத்து நகை வாங்குவோர் வருவாயில் இருந்து ஒரு சதவீத வரி செலுத்த வேண்டும் என்ற விதி அமலில் இருந்தது என்பது நமக்கு தெரியும் .ஆனால், கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக , ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு அதிக அளவில் கருப்புப் பணத்தைக் கொண்டு தங்க நகைகள் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் மாற்றம் :
5 லட்சமாக இருந்ததை,2 லட்சமாக உச்சவரம்பை நிர்ணயித்து, தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொது சரக்கு பட்டியலில் தங்க நகை சேர்க்கப்படவுள்ளதால், வருமான வரிச்சட்டப்படி ஒரு சதவீத வரி வசூலிக்கப்படவுள்ளது. இந்த விதி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான சட்டம் :
3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து பொருட்களை வாங்க கூடாது என தற்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மீறினால், எந்த அளவு பணத்தை கொடுத்து பொருட்களை வாங்கினமோ, அதே அளவு பணத்தை அபராதமாக ,விற்றவர் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.