9 லட்சம் பேருக்கு கெடு .....ஏப்ரல் 1 ஆம் தேதி பாயப்போகிறது வருமானவரித்துறை....!!!

Asianet News Tamil  
Published : Feb 17, 2017, 03:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
9 லட்சம் பேருக்கு கெடு .....ஏப்ரல் 1 ஆம் தேதி பாயப்போகிறது வருமானவரித்துறை....!!!

சுருக்கம்

9 லட்சம் பேருக்கு கெடு 

பழைய ரூபாய் நோட்டுகள்  செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு, மக்கள் தங்களிடமிருந்த அனைத்து  பணத்தையும்  வங்கியில் டெபாசிட்   செய்தனர்.  இதில் கருப்பு  பணமும்  அடங்கும்.

இதில் குறிப்பாக, 5 லட்சத்திற்கும் அதிகமாக வங்கி  கணக்கில் டெபாசிட் செய்தவர்களை மட்டும் வருமான வரித்துறையினர் கணக்கெடுத்து, வைத்துள்ளனர். அதன்படி 18 லட்சம் வாடிக்கையாளர்களின்  கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விளக்கம் கேட்டு மெயில்  அனுப்பப்பட்டுள்ளது. இதில் சுமார் 5.27  பேர் இ-பைலிங் முறையில் பதிலளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீப் கல்யாண் திட்டம் 

கருப்புப் பணம், டெபாசிட் செய்தவர்கள், கரீப் கல்யாண் திட்டத்தின்  மூலம்,50 சதவீத வரி, அபராதம் மற்றும் கரீப் கல்யாண் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு வட்டியில்லா டெபாசிட்டாக 25 சதவீதம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் அடுத்த மாதம் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்  என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 1 ஆம் தேதி  முதல்   சோதனை

கருப்புப்பண விவகாரத்தில், சந்தேகிக்கப்பட்ட வர்களில்,  பதில்  அளிக்காத சுமார்  9 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை  சோதனை நடத்த  திட்டமிட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.   

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

காலி பாட்டில் குப்பைன்னு நினைச்சீங்களா? பணம் கொட்டும் ரகசியம் இதோ!
டி-மார்ட் விலை ஏன் குறைவு? பின்னால இருக்குற ட்ரிக் இதுதான்!