பணம் எடுக்க முடியுமா ...? முடியாதா...? இவங்க என்ன  சொன்னாங்க பாருங்க .....!!!

First Published Dec 26, 2016, 2:13 PM IST
Highlights


பணம் எடுக்க முடியுமா ...? முடியாதா...? இவங்க என்ன  சொன்னாங்க பாருங்க .....!!!

கருப்பு பண ஒழிப்பு காரணாமாக  எடுக்கப்பட்ட  நடவடிக்கை ,  தற்போது  பொதுமக்களை  வாட்டி வதைக்கிறது.

வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை,  எடுப்பதற்கு  பல  கட்டுபாடுகள்  உள்ளன. இந்நிலையில் , பிரதமர் மோடி அவர்கள்  ஏற்கனவே  அறிவித்ததை  போல, டிசம்பர் 31  ஆம்  தேதிக்கு  பின் , சாதாரண சூழல்  நிலவும்  என  தெரிவித்து  இருந்தார்.  இந்நிலையில், அவர் சொன்ன  “ 50  நாட்கள்  கால அவகாசம்”   முடிய இன்னும்   மூன்று நாட்களே உள்ளன.

தற்போது ஒரு நாளைக்கு  ஒரு நபர் , வங்கி கணக்கில்  இருந்து 2,500   ரூபாய்  மட்டுமே  எடுக்க  முடியும் என்றும், அதிக பட்சமாக ஒரு வாரத்திற்கு  24, 000 ரூபாய்  மட்டுமே எடுக்க முடியும் என தெரிவித்து இருந்தது.

ஆனால் , அறிவித்தபடி  பணத்தை  எடுக்க  முடியவில்லை,  வெறும் 2,௦௦௦    ரூபாய்  மட்டுமே  எடுக்க  முடிகிறது,. 

இந்நிலையில்,  வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல்  நிலைமை சரியாகி விடுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஏனெனில்,  இதுவரை  , வங்கி ஏடிஎம்மில்  இருந்து, ஒத்த 2,000 ரூபாய்   மட்டுமே  எடுக்க முடிந்தது.

இந்நிலையில்  அதிவேகமாக  புதிய  500  ரூபாய்  நோட்டுகளை , இந்தியாவில்  முக்கிய  மூன்று இடங்களில்  அச்சிடப் பட்டு  வருகிறது. அவ்வாறு  போதுமான  அளவு  பணம்  அச்சிட ப்பட்டு , ரிசர்வ் வங்கியின் மூலம்  மற்ற  வங்கிகளுக்கு  அனுப்பினால்  மட்டுமே , வங்கியில் இருந்து பணத்தை   எடுப்பதற்காண கட்டுபாடுகள்  நீங்கும் என  தெரிகிறது.

இதனால்,  மோடி அறிவித்த,  50  நாட்கள்  கால  அவகாசம்  முடியும் தருவாயில்,  பணத்தின்  தட்டுபாடு  காரணமாக ,  நிலைமை  சரியாக  இன்னும்  கால தாமதமாகும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை அனைத்திந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹர்விந்தர்  சிங்கும்  தெரிவித்தார்.

 எனவே  பணம் எடுப்பதற்கான  கட்டுப்பாடு,  ஜனவரியிலும்  தொடரும் என  தெரிகிறது.

 

 

click me!