கடைசி 3 நாள் வாய்ப்பு...! பழைய ரூபாய் நோட்டை மாற்ற முடியுமா ? கை கொடுத்ததா ..கை விரித்ததா ரிசர்வ் வங்கி

Asianet News Tamil  
Published : Mar 27, 2017, 06:49 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
கடைசி 3 நாள் வாய்ப்பு...!   பழைய ரூபாய் நோட்டை மாற்ற முடியுமா ? கை கொடுத்ததா ..கை விரித்ததா ரிசர்வ் வங்கி

சுருக்கம்

there is chance to change the old rupees in rbi

கடைசி 3 நாள் வாய்ப்பு...! பழைய ரூபாய் நோட்டை மாற்ற முடியுமா ?

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு பின்பு, தங்களிடமிருந்த பழைய ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள கால அவகாசத்தை மத்திய அரசு கொடுத்தது.

பின்னர் பழைய ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ள டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசாம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மார்ச் 31 ஆம் தேதி வரை, பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது.

ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டும்தான், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும் என  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது ஜனவரி 1 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையில்  பழைய ரூபாய் நோட்டை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்க மறுத்த ரிசர்வ் வங்கி, இந்த விசாரணை ஆர்டிஐ சட்டத்தின் தகவல் என்ற பிரிவின் கீழ் வராது என விளக்கம் அனுப்பி கை  விரித்து விட்டது 

பழைய ரூபாய்    நோட்டை  மாற்ற இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் தருவாயில், கஷ்டப்பட்டு உண்மையில் உழைத்து சம்பாதித்த  பலரும், என்றோ ஒரு நாள்    மறந்து வைத்துவிட்டு  பின்னர் மீண்டும் தற்போது  கண்ணில் தென்பட்ட 1 அல்லது  சில பழைய ரூபாய் தாள்களை வைத்துக்கொண்டு, எப்படியாவது மாற்ற முடியுமா  என்ற ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

மார்ச் 29,30,31 ஆகிய தேதிகளில் பழைய ருபாய் நோட்டை மாற்றிக்கொள்ள முடியும் என  ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் பல கடுமையான கட்டுப்பாடுகளுடன் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் நிலை உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

23 நாட்களில் தங்கம் ரூ.22,000 உயர்வு.. வெள்ளி ரூ.91,000 பாய்ச்சல்.. முழு விவரம் இங்கே.!!
தங்கத்தை இப்போது வாங்கலாமா? விற்கலாமா? பாபா வாங்காவின் எச்சரிக்கை!