வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படாது என்றும், ஜூலை 31க்குள் ஐடிஆர் தாக்கல் செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்ய இன்னும் குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த காலக்கெடு 31 ஜூலை 2024க்கு பிறகு நீட்டிக்கப்படப் போவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், வருமான வரி செலுத்துவோர் சரியான நேரத்தில் தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது முக்கியம். வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கடைசி நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் தவறு நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் எச்சரிக்கிறார்கள்.
ஐடிஆர் தாக்கல் : ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யப்படாவிட்டால், பின்னர் ரிட்டன் தாக்கல் செய்யும் போது அபராதம் மற்றும் வரி மீதான வட்டியை செலுத்த வேண்டும். ரிட்டன் தாக்கல் செய்ய வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம் ஆகும். இதற்குப் பிறகுதான் நீங்கள் இந்த தளத்தில் உள்நுழைய முடியும். நீங்கள் முதல் முறையாக ரிட்டன் தாக்கல் செய்யப் போகிறீர்கள் என்றால், முதலில் பதிவு செய்ய https://www.incometax.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் 'பதிவு' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ரூ.4000 வரை சரிந்த தங்க விலை.. இதற்கு காரணம் மத்திய அரசே கிடையாது.. அப்போ யாரு தெரியுமா?
வருமான வரி : பின்னர் உங்கள் பான் எண்ணை ‘வரி செலுத்துபவராகப் பதிவு செய்’ என்பதில் உள்ளிட வேண்டும். அதன் பிறகு Validate என்பதைக் கிளிக் செய்யவும். இ-ஃபைலிங் தளத்தில் உள்நுழைந்த பிறகு, முதலில் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் நீங்கள் தாக்கல் செய்யும் நிலையைச் சொல்ல வேண்டும். பின்னர் உங்களுக்கான சரியான ITR படிவத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் ஐடிஆர் படிவத்தில் முன் நிரப்பப்பட்ட விவரங்களை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
கடைசி தேதி : வரி கணக்கீட்டில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஒரு வேலையைச் செய்தால், படிவம்-16 இன் தரவைப் பயன்படுத்தலாம். மற்றவர்கள் படிவம் 26AS மற்றும் வருடாந்திர தகவல் அறிக்கையில் TDS போன்றவற்றின் தரவை சரிபார்க்கலாம். அனைத்து தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, உங்கள் ஐடிஆர் விவரங்களை சரிபார்க்க வேண்டும். எனவே ஜூலை 31க்குள் ஐடிஆர் தாக்கல் செய்து அபராதத்தை தவிருங்கள்.
உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.295 காணாம போகுதா? அதற்கு இதுதான் காரணம்!