gold rate today: ஏறுமுகத்தில் தங்கம் விலை! 3 நாட்களில் சவரனுக்கு ரூ.696 அதிகரிப்பு: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Sep 30, 2022, 10:33 AM IST
Highlights

தங்கம் விலை ஏறமுகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.696 அதிகரித்துள்ளது

தங்கம் விலை ஏறமுகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து 3வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.696 அதிகரித்துள்ளது

தங்கம் விலை இன்று கிராமுக்கு 17ரூபாயும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது.  

அக்டோபர் 1 முதல் ரயிலில் சரக்குக் கட்டணம் உயர்கிறது: காரணம் என்ன?

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,680 ஆகவும், சவரன், ரூ.37,440 ஆகவும் இருந்தது. 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 17ரூபாய் அதிகரித்து, ரூ.4,697ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.136 ஏற்றம் கண்டு, ரூ.37,576ஆக அதிகரித்துள்ளது. 
கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,697ஆக விற்கப்படுகிறது.

முக்கியத் திட்டங்களுக்கு இல்லை! சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு மட்டும் வட்டி உயர்வு

தங்கம் விலை வார தொடக்கத்தில்ருந்து சரிந்து சவரனுக்கு ரூ.328 வீழ்ச்சி அடைந்தது. ஆனால், தொடரந்து 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.696 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நாளுக்குநாள் கணிக்க முடியாத நிலையில் செல்கிறது. தங்கம் விலை இருநாட்கள் சரிந்தநிலையில் மேலும் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் அதற்கு மாறாக கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.700 வரை உயர்ந்துள்ளது. 

இஎம்ஐ அதிகரிக்கும்! கடனுக்கான ரெப்போ ரேட் 50 புள்ளிகள் உயர்வு: வட்டி 5.90% மாக உயர்வு:ஆர்பிஐ அதிரடி

வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ரூ.61.50ஆகவும், கிலோ ரூ.61,500 ஆகவும் விற்கப்படுகிறது

click me!