நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளதையடுத்து, கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் வரை உயர்த்தி ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது
நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளதையடுத்து, கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் வரை உயர்த்தி ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது
இதன் மூலம் கடனுக்கான வட்டிவீதம் அல்லது ரெப்போ ரேட் 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3வது நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 4.40 சதவீதமாக இருந்த வட்டி தற்போது 5.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முக்கியத் திட்டங்களுக்கு இல்லை! சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு மட்டும் வட்டி உயர்வு
நாட்டில் பணவீக்கம் 8 சதவீதத்தை எட்டியதையடுத்து, கடந்த இரு நிதிக்கொள்கைக் கூட்டங்களிலும் ரெப்போ ரேட் வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது இதனால் பணவீக்கம் குறைந்து 7 சதவீதத்துக்கும் கீழ் வந்தது. ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்து மீண்டும் 7 சதவீதத்தை எட்டியது.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் 3வது நிதிக்கொள்கைக் கூட்டம் கடந்த இரு நாட்களாக நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிதிக் கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் இன்று அறிவித்தார்.
பாக்கெட் பத்திரம்! இஎம்ஐ அதிகரிக்கும்! ரெப்போ ரேட் 50 புள்ளிகள் வரை ஆர்பிஐ உயர்த்த வாய்ப்பு
அவர் அளித்தபேட்டியில் “ நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கடனுக்கான ரெப்போ ரேட்டை 50 புள்ளிகள் உயர்த்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதன் படி கடனுக்கான வட்டி 5.90சதவீதமாக உயர்கிறது. இதுஉடனடியாக அமலுக்கு வருகிறது” எனத் தெரிவித்தார்
கடனுக்கான வட்டிவீதம் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டதால் வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்கியோர் மாதம் செலுத்தும் இஎம்ஐ அளவு அதிகரிக்கும். மாத ஊதியம் பெறுவோர் இஎம்ஐ செலுத்துபவர்களாக இருந்தால், அவர்களின் பாக்கெட்டிலிருந்து அதிகமாக பணம் வட்டிக்காக வெளியேறும்