Johnson Baby: ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடர் நிறுவனத்தின் தயாரிப்பு லைசன்ஸ் ரத்து: மகாராஷ்டிரா அரசு அதிரடி

By Pothy Raj  |  First Published Sep 17, 2022, 9:24 AM IST

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்புக்கான லைசன்ஸை ரத்து செய்து மகராஷ்டிரா அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர் தயாரிப்புக்கான லைசன்ஸை ரத்து செய்து மகராஷ்டிரா அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை பிறப்பித்த  உத்தரவில், “ புனே மற்றும் நாசிக்கில் செயல்பட்டுவரும் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்பின் மாதிரிகளை எடுத்து பரிசோதனை நடத்தப்பட்டது. 

Tap to resize

Latest Videos

உலகின் 2-வது கோடீஸ்வரராக உயர்ந்தார் கெளதம் அதானி: ஃபோர்ப்ஸ் பட்டியல்

அந்த பரிசோதனையில் பவுடரின் மாதிரிகள் தரநிர்ணயித்துக்கு குறைவாக இருப்பதாக அறியவந்தது. இதையடுத்து, உடனடியாகத் தயாரிப்பை நிறுத்த உத்தரவிடுகிறோம். ஐஎஸ் 5339:2004 தரநிர்ணயத்துக்கு உட்பட்டு பவுடர் தயாரிப்பு இருக்க வேண்டும். 


ஆனால், ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடர் தரம் அவ்வாறு இல்லை. அது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கான பிஹெச் பரிசோதனையிலும் தரம் போதுமானதாக இல்லை என்பதால் உற்பத்திக்கான லைசன்ஸை ரத்து செய்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மகாராஷ்டிரா உணவு மற்றும்மருந்து நிர்வாகத்துறை, ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி, தங்களிடம் இருக்கும் பவுடர் இருப்பு, விற்பனையில் இருக்கும் அளவு ஆகியவற்றை தெரிவிக்க கேட்டுள்ளது.

தேசிய சரக்குப்போக்குவரத்து கொள்கை: பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வெளியிடுகிறார்
ஆனால், மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நோட்டீஸை எதிர்த்து அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அன்ட் ஜான்சன் நீதிமன்றத்தைநாடியது. கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்தில் தங்கள் பவுடரின் மாதிரிகளை பரிசோதிக்க வேண்டும் என்று கோரியது. 


கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து பரிசோதனை மையம், அளித்த அறிக்கையில், “ ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடர் பிஹெச் மதிப்புக்கு இணையாக இல்லை. ஐஎஸ் 5339:2004 தரநிர்ணயத்துக்கு உட்பட்டு பவுடர் தயாரிப்பு இல்லை. இந்த பவுடரால் பச்சிளங்குழந்தைகள் உடலின் தோல் பாதிக்கப்படும் “ என்று தெரிவித்தது.

எலான் மஸ்க் என்ன செய்வார்? ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல்
கொல்கத்தா ஆய்வகத்தின் அறிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் செயல்படும் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தனது பவுடர் தயாரிப்பின் லைசன்ஸை உடனடியாக ரத்து செய்து மகாராஷ்டிரா அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

click me!